எளிமையான ரசம் ரெசிபி (Rasam Recipe)

 
விமர்சனம் எழுத
எளிமையான ரசம்
எளிமையான ரசம் தயாரிப்பது எப்படி
 • சமையல்காரர்: Kishore D Reddy
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

மிளகு, தக்காளி, பருப்பு ஆகியவை சேர்த்து ருசியான மற்றும் ஆரோக்கியமான ரசம் ரெசிபியை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். மேலும் இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

எளிமையான ரசம் சமைக்க தேவையான பொருட்கள்

 • 100 கிராம் துவரம் பருப்பு
 • 100 கிராம் தக்காளி
 • 500 மில்லி லிட்டர் தண்ணீர்
 • 25 கிராம் புளி
 • ரசப்பொடி தயாரிக்க
 • 10 கிராம் மிளகு
 • 10 கிராம் சீரகம்
 • 10 கிராம் மல்லி விதை
 • 3 கிராம் காய்ந்த மிளகாய்
 • தாளிக்க:
 • 30 மில்லி லிட்டர் எண்ணெய்
 • 3 கிராம் கடுகு
 • 2 கிராம் கறிவேப்பிலை
 • 3 பூண்டு
 • 10 கிராம் கொத்தமல்லி இலை
 • உப்பு

எளிமையான ரசம் எப்படி செய்வது

 • 1.பூண்டு மற்றும் தக்காளியை நசுக்கி கொள்ளவும்.
 • 2.புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.
 • 3.அரைக்க தேவையானவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 • 4.பருப்பு மற்றும் தக்காளி இரண்டையும் சேர்த்து நன்கு வேக விடவும்.
 • 5.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 • 6.மேலும் அத்துடன் பூண்டு, கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளவும்.
 • 7.இப்போது பருப்பு வெந்தபின் அதில் வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • 8.அத்துடன் புளிக்கரைசல் மற்றும் ரசப்பொடியை சேர்த்து கொள்ளவும்.
 • 9.மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி பரிமாறலாம்.
Key Ingredients: துவரம் பருப்பு , தக்காளி , தண்ணீர் , புளி , மிளகு , சீரகம் , மல்லி விதை , காய்ந்த மிளகாய் , எண்ணெய் , கடுகு , கறிவேப்பிலை , பூண்டு , கொத்தமல்லி இலை ,
Comments

Advertisement
தொடர்புடைய சமையல்கள்
Advertisement