ரெட் சாஸ் பாஸ்தா ரெசிபி (Red Sauce Pasta Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ரெட் சாஸ் பாஸ்தா
 • சமையல்காரர்: Chef Anna Tasca Lanza, The ITC Hotel Maurya Sheraton, New Delhi
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

பாரம்பரியமான இத்தாலியன் ரெசிபியான இந்த பாஸ்தா புளிப்பு மற்றும் காரம் சேர்ந்ததாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

ரெட் சாஸ் பாஸ்தா சமைக்க தேவையான பொருட்கள்

 • சாஸ் தயாரிக்க:
 • 5-6 நறுக்கிய தக்காளி
 • 1 பூண்டு
 • 1 வெங்காயம்
 • 1/2 கப் தண்ணீர்
 • 1 பிரியாணி இலை
 • 1/2 தேக்கரண்டி சர்க்கரை
 • 4-5 துளசி
 • 1 மேஜைக்கரண்டி வெங்காயம், நறுக்கப்பட்ட
 • 1/2 மேஜைக்கரண்டி பூண்டு, நறுக்கப்பட்ட
 • சுவைக்க உப்பு
 • எண்ணெய்
 • பாஸ்தா தயாரிக்க:
 • 110 கிராம் பாஸ்தா
 • 3 கப் தண்ணீர்
 • ஒரு சிட்டிகை உப்பு

ரெட் சாஸ் பாஸ்தா எப்படி செய்வது

 • சாஸ் தயாரிக்க:
 • 1.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளி சேர்த்து வேகவிடவும்.
 • 2.அத்துடன் பூண்டு, வெங்காயம் பிரியாணி இலை சேர்க்கவும்.
 • 3.அதில் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
 • 4.தக்காளி வேகும்வரை மூடி வைக்கவும்.
 • 5.சூடு ஆறியபின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
 • 6.அடுப்பில் வேறொரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கவும்.
 • 7.அத்துடன் அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து சுண்டும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
 • 8.அதில் துளசி இலையை சேர்த்து தனியே எடுத்து வைக்கவும்.
 • பாஸ்தா தயாரிக்க:
 • 1.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
 • 2.அத்துடன் பாஸ்தா சேர்த்து வேகவிடவும். பின் அதில் இருக்கும் தண்ணீரை வடித்து விடவும்.
 • 3.ஒரு தட்டில் பாஸ்தாவை வைத்து அத்துடன் இந்த தக்காளி சாஸை சேர்த்து பரிமாறவும்.
Key Ingredients: நறுக்கிய தக்காளி, பூண்டு, வெங்காயம், தண்ணீர், பிரியாணி இலை, சர்க்கரை, துளசி, வெங்காயம், பூண்டு, உப்பு, எண்ணெய், பாஸ்தா, தண்ணீர், உப்பு
Comments

Advertisement
Advertisement