ஷ்ரிக்கந்த் ரெசிபி (Shrikhand Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
 • ஷ்ரிக்கந்த்
 • ஷ்ரிக்கந்த்
 • சமையல்காரர்: Niru Gupta
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத்தின் பாரம்பரியமான இனிப்பு இது. தயிர், சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபியை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் எளிமையான இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ஷ்ரிக்கந்த் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 1/2 கப் தயிர்
 • 1/4 கப் சர்க்கரை, பொடியாக்கப்பட்ட
 • 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள்

ஷ்ரிக்கந்த் எப்படி செய்வது

 • 1.ஒரு பாத்திரத்தின் மேல் மெல்லிசான துணியை போட்டு அதில் தயிரை ஊற்றவும். தயிரில் இருக்கும் அதிகபடியான தண்ணீர் வடியும் வரை ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.
 • 2.வடிகட்டிய தயிரை ஒரு பௌலில் எடுத்து அதில் பொடித்து வைத்துள்ள சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 3.மற்றொரு பௌலில் இந்த மாற்றி அதில் மீதமுள்ள ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும்.
 • 4.இதனை இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.
Key Ingredients: தயிர், சர்க்கரை, ஏலக்காய் தூள்
Comments

Advertisement
Advertisement