ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஷார்ட்ப்ரட் பிஸ்கட் ரெசிபி (Strawberry Jam Shortbread Biscuit Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஷார்ட்ப்ரட் பிஸ்கட்
 • சமையல்காரர்: Virender - Mia Bella
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

மிகவும் எளிமையாக ஸ்ட்ராபெர்ரி ஜாம் கொண்டு எப்படி பிஸ்கட் செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஷார்ட்ப்ரட் பிஸ்கட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1/2 கப் சர்க்கரை
 • 1 கப் வெண்ணெய்
 • 2 கப் மைதா
 • 1 முட்டை
 • ஹார்ட் ஷேப் மோல்டு
 • 200 கிராம் ஸ்ட்ராபெர்ரீஸ்
 • 50 கிராம் சர்க்கரை
 • 5 கிராம் ஜெலட்டின்

ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஷார்ட்ப்ரட் பிஸ்கட் எப்படி செய்வது

 • 1.சர்க்கரை, வெண்ணெய் மற்றும் மைதா ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 2.அத்துடன் முட்டை சேர்த்து, கலந்து இந்த மாவை சப்பாத்தி போல தேய்த்து கொள்ளவும். ஹார்ட் ஷேப் மோல்டால் இந்த மாவை வெட்டி கொள்ளவும்.
 • 3.மைக்ரோவேவ் அவனை 180 டிகிரியில் வைத்து 9 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும்.
 • ஸ்ட்ராபெர்ரி ஜாம் தயாரிக்க:
 • 1.ஸ்ட்ராபெர்ரி, சர்க்கரை மற்றும் ஜெலட்டின் ஆகிய மூன்றையும் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும்.
 • 2.இந்த ஜாமை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து பிஸ்கட்டின் மேல் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.
Key Ingredients: சர்க்கரை, வெண்ணெய், மைதா, முட்டை, ஹார்ட் ஷேப் மோல்டு, ஸ்ட்ராபெர்ரீஸ், சர்க்கரை, ஜெலட்டின்
Comments

Advertisement
Advertisement