சுர்மாய் கறி வித் லோப்ஸ்டர் பட்டர் ரைஸ் ரெசிபி (Surmai Curry with Lobster Butter Rice Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
சுர்மாய் கறி வித் லோப்ஸ்டர் பட்டர் ரைஸ்
 • சமையல்காரர்: Kamlesh Rawat - Radisson Mumbai Goregaon
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: கடினம்

மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த சுர்மாய் கறி எப்படி செய்வதென்று பார்ப்போம்.

சுர்மாய் கறி வித் லோப்ஸ்டர் பட்டர் ரைஸ் சமைக்க தேவையான பொருட்கள்

 • ஊறவைக்க:
 • 1 புளி
 • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • மசாலா:
 • 2 கப் தேங்காய், துருவிய
 • 1 நடுத்தரமாக வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்ட
 • 4 பூண்டு
 • 3 மேஜைக்கரண்டி கொத்தமல்லி விதை
 • 10 வெந்தயம், ஃப்ரைட்
 • 3 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • சிறிய புளி
 • ரைஸ்:
 • 2 மேஜைக்கரண்டி பட்டர்
 • 1 (500 g) லோப்ஸ்டர்
 • 1/2 தேக்கரண்டி உப்பு மற்றும் எலுமிச்சை
 • 2 (150 g each) சுர்மாய்

சுர்மாய் கறி வித் லோப்ஸ்டர் பட்டர் ரைஸ் எப்படி செய்வது

 • 1.ஒரு பௌலில் புளியை ஊற வைத்து, கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
 • 2.புளி கரைசல், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல் கலந்து வைத்து கொள்ளவும்.
 • 3.இந்த பேஸ்ட்டை கழுவி வைத்த மீனில் தடவி அரை மணிநேரம் ஃப்ரிட்ஜில் ஊற வைக்கவும்.
 • 4.மிக்ஸியில் தேங்காய், வெங்காயம், பூண்டு, கிராம்பு, கொத்தமல்லி விதை, வெந்தயம், சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள் அத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 • 5.அடுப்பில் கடாயை வைத்து, அரைத்து வைத்த மசாலா பொருட்கள், உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 6.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
 • 7.அத்துடன் மசாலா தடவி ஊறவைத்த மீனை அதில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 2-3 நிமிடங்கள் வேக வைத்து இறக்கிவிடவும்.
 • 8.லோப்ஸ்டரை சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து அதில் பட்டர் சேர்த்து வெட்டி வைத்த லோப்ஸ்டரை சேர்க்கவும்.
 • 9.அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
 • 10.லோப்ஸ்டரின் ஷெல் கொண்டு அலங்கரிக்கவும்.
Key Ingredients: புளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேங்காய், வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி விதை, வெந்தயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், புளி, பட்டர், லோப்ஸ்டர், உப்பு மற்றும் எலுமிச்சை, சுர்மாய்
Comments

Advertisement
Advertisement