இனிப்பும் காரமும் உள்ள பாதாம் ரெசிபி (Sweet Chilli Almonds Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
இனிப்பும் காரமும் உள்ள பாதாம்
இனிப்பும் காரமும் உள்ள பாதாம்
 • சமையல்காரர்: Kunal Kapur
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

இனிப்பும் காரமும் உள்ள பாதாம்: பாதாம் பருப்பை விரும்பாதவர்கள் என்று யாருமில்லை. வைட்டமின்கள் மினரல்ஸும் நிறைந்த ஒன்று என்றால் அது பாதாம் பரும்பும் மட்டுமே. மதிய நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக இந்த இனிப்பும் காரமுமாக இருக்கும் இந்த பாதாமை சாப்பிடலாம். தனித்துவமான இந்த ரெசிபியை செய்து உங்களின் உறவுகளுக்கு பரிமாறுங்கள்.

இனிப்பும் காரமும் உள்ள பாதாம் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கப் பாதாம் பருப்பு
 • 1/2 முட்டையின் வெள்ளைக்கரு
 • 2 sprigs கருவேப்பிலை
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • 2 தேக்கரண்டி சர்க்கரை
 • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்

இனிப்பும் காரமும் உள்ள பாதாம் எப்படி செய்வது

 • 1.மைக்ரோஒவனில் குறைவான சூட்டில் கறிவேப்பிலையை வைத்து மொறுமொறுப்பாக எடுத்தால் உடையும் பதத்திற்கு வைத்து எடுக்கவும். கருவேப்பிலையை பொடிபொடியாக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும் அதனுடன் உப்பு, சர்க்கரை, மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
 • 2.முட்டையின் வெள்ளைக்கரு அதனுடன் பாதாமையும் சேர்த்து நன்றாக கலக்கவும். முட்டையின் வெள்ளைக்கரு பாதாமில் அனைத்திலும் ஒட்டியிருக்கும் விதமாக நன்றாக கலந்து கிளறவும்.
 • 3.அதனுடன் கலந்து வைத்த மசாலா கலவையை தூவி கிளறவும். பின் ரோஸ்டிங் ட்ரேயில் பாதாம் பருப்பை கொட்டி பரப்பவும்.
 • 4.120டிகிரி செல்சியஸில் ஓவனை ப்ரீ ஹீட் செய்து 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
 • 5.ட்ரேயிலிருந்து கிண்ணத்திற்கு மாற்றி நன்றாக ஆறவைக்கவும். காற்று புகாத டப்பாவில் வைத்து தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
Key Ingredients: பாதாம் பருப்பு, முட்டையின் வெள்ளைக்கரு, கருவேப்பிலை, உப்பு, சர்க்கரை, மிளகாய் தூள்
Comments

Advertisement
Advertisement