தந்தூரி கோபி ரெசிபி (Tandoori Gobhi Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
தந்தூரி கோபி
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

எப்போதும் போல் பனீர் அல்லது மஷ்ரூமை மசால் தடவு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்காமல் தந்தூரி ஸ்டைலில் செய்து அசத்துங்கள்.

தந்தூரி கோபி சமைக்க தேவையான பொருட்கள்

 • தந்தூரி மசாலா தயாரிக்க:
 • 5 எண்ணிக்கை கிராம்பு
 • 1/2 குச்சிகள் பட்டை
 • 1/2 தேக்கரண்டி ஏலக்காய்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1/8 தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி
 • 1/2 தேக்கரண்டி இஞ்சி பொடி
 • 1 தேக்கரண்டி மில்லித் தூள்
 • 1/2 தேக்கரண்டி வெந்தயம்
 • 1/2 தேக்கரண்டி ஓமம்
 • மசாலா தயாரிக்க:
 • 1 தேக்கரண்டி இஞ்சி விழுது
 • 1 தேக்கரண்டி பூண்டு விழுது
 • 1/2 கப் தயிர்
 • 2 மேஜைக்கரண்டி வறுத்த கடலைமாவு
 • 1 தேக்கரண்டி எண்ணெய்
 • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
 • 1/2 தேக்கரண்டி மிளகு
 • 1 தேக்கரண்டி உப்பு
 • 2 மேஜைக்கரண்டி க்ரவுண்ட் மசாலா
 • 500 கிராம் கோபி

தந்தூரி கோபி எப்படி செய்வது

 • தந்தூரி மசாலா தயாரிக்க:
 • 1.கிராம்பு, பட்டை, ஏலக்காய் சீரகம் ஜாதிக்காய் பொடி, உலர்ந்த இஞ்சி, மல்லித்தூள், வெந்தயம் மற்றும் ஓமம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.தந்தூரி கோபி
 • மசாலா தயாரிக்க:
 • 1.ஒரு பௌலில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், வறுத்த கடலை மாவு, எண்ணெய், மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.தந்தூரி கோபி
 • 2.அத்துடன் தந்தூரி மசாலாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.தந்தூரி கோபி
 • 3.வெட்டி வைத்த காலிப்ளவரை இந்த மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்.தந்தூரி கோபி
 • 4.15 நிமிடங்கள் வரை இதனை அப்படியே ஊற வைக்கவும்.
 • 5.மசாலாவுடன் சேர்ந்து நன்கு ஊறியபின் 20-25 நிமிடங்கள் வரை அதனை 220 டிகிரியில் வைத்து க்ரில் செய்யவும்.
 • 6.இந்த தந்தூரி கோபியை க்ரீன் சட்னியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.தந்தூரி கோபி
 • 7.கொத்தமல்லி இலை மற்றும் சாட் மசாலா தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Key Ingredients: கிராம்பு, பட்டை, ஏலக்காய், சீரகம், ஜாதிக்காய் பொடி, இஞ்சி பொடி, மில்லித் தூள், வெந்தயம், ஓமம், இஞ்சி விழுது, பூண்டு விழுது, தயிர், வறுத்த கடலைமாவு, எண்ணெய், மிளகாய் தூள், மிளகு, உப்பு, க்ரவுண்ட் மசாலா, கோபி
Watch the step by step recipe of Tandoori Gobhi here:
Comments

Advertisement
Advertisement