தண்டாய் பர்பி ரெசிபி (Thandai Barfi Recipe)

 
விமர்சனம் எழுத
தண்டாய் பர்பி
தண்டாய் பர்பி செய்முறை
 • சமையல்காரர்: Rahul Dhavale
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

தண்டாய் பர்பி செய்முறை: ஹோலி பண்டிகையை ஒட்டி செய்யப்படும் இனிப்பு வகைகளுள் ஒன்று. பர்பி இந்திய இனிப்பு வகை. அதிலும் அதை குளிர்ச்சியாக வைத்து சாப்பிடுவது கூடுதல் சுவையை சேர்க்கும். பிஸ்தா, குங்குமம் பூ மற்றும் தண்டாய் சிரப்பும் கலந்துள்ளது. ஹோலி பார்டியில் இருக்க வேண்டிய இனிப்பு வகை

தண்டாய் பர்பி சமைக்க தேவையான பொருட்கள்

 • 1.5 லிட்டர் பால்
 • 150 சர்க்கரை
 • 50 பிஸ்தா
 • 0.2 குங்குமப் பூ
 • 50 தண்டாய் சிரப்

தண்டாய் பர்பி எப்படி செய்வது

 • 1.அடிக் கணமான பாத்திரத்தில் கொழுப்புச் சத்து நிறைந்த பாலை எடுத்துக் கொள்ளவும், அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
 • 2.குறைந்தளவு தீயில் வைத்து நன்றாக கிளறி வரவும். அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
 • 3.பால் நன்றாக் சுண்டி கோவா போல் திரண்டு வரும்.
 • 4.பின் அதில் தண்டாய் சிரப் மற்றும் நறுக்கிய பிஸ்தா மற்றும் குங்குமப்பூவை சேர்க்கவும்.
 • 5.தயாரானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.
 • 6.குங்குமப் பூ தூவி அலங்கரிக்கவும்.
 • 7.1 இன்ஞ் சதுர வடிவ துண்டாக வெட்டி பரிமாறவும்
Key Ingredients: பால், சர்க்கரை, பிஸ்தா, குங்குமப் பூ, தண்டாய் சிரப்

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement