டைனி வடா பாவ் ரெசிபி (Tiny Vada Pao Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
டைனி வடா பாவ்
 • சமையல்காரர்: Manoj Pandey
 • Restaurant: Duty Free
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

மும்பையின் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட்டான இந்த வடா பாவில் உருளைக்கிழங்கு, மசாலா பொருட்கள் மற்றும் ப்ரட் இருக்கிறது. இதனை மாலை நேர உணவாக சாப்பிடலாம்.

டைனி வடா பாவ் சமைக்க தேவையான பொருட்கள்

 • உருளைக்கிழங்கு கலவை தயாரிக்க:
 • 1 கப் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு
 • 1 மேஜைக்கரண்டி பூண்டு, பொடியாக நறுக்கப்பட்ட
 • 1 தேக்கரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கப்பட்ட
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 மேஜைக்கரண்டி மல்லித் தூள்
 • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
 • சுவைக்க உப்பு
 • ஃப்ரிட்டர் தயாரிக்க:
 • 3/4 கப் கடலைமாவு
 • உப்பு
 • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
 • 1 1/4 கப் தண்ணீர்
 • எண்ணெய்
 • 3 துண்டுகள் பாவ் ப்ரட்
 • 1 தேக்கரண்டி எண்ணெய்
 • மேலும் தேவையானவை:
 • 1/4 கப் புளி கரைசல்
 • 1/4 கப் க்ரீன் சட்னி
 • 1/8 கப் சுவீட் யோகர்ட்

டைனி வடா பாவ் எப்படி செய்வது

 • 1.கடாயில் எண்ணெய் ஊற்றவும். அதில் சீரகம், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
 • 2.பொன்னிறமாக வதங்கியபின் மசாலா பொடிகள், உப்பு மற்றும் மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
 • 3.நன்கு கலந்து அடுப்பை நிறுத்திவிடவும். அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கிய சிலாண்ட்ரோவை தூவி அலங்கரிக்கவும்.
 • 4.உருளைக்கிழங்கு சூடு ஆறியதும் அதனை 10-12 பங்காக பிரித்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
 • 5.அதில் கடலைமாவு, உப்பு, மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
 • 6.எண்ணெயை சூடாக்கி கொள்ளவும்.
 • 7.உருட்டி வைத்ததை இந்த மாவில் தொட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
 • 8.பொன்னிறமாக வந்ததும் அதனை எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.
 • 9.ப்ரட்டை மெல்லிசாக வெட்டி வைக்கவும்.
 • 10.சப்பாத்தியை போல் ப்ரட்டை நன்கு மெல்லிசாக தேய்த்து கொள்ளவும்.
 • 11.க்ரீஸ் செய்யப்பட்ட பேனில் தேய்த்து வைத்த ப்ரட்டை வைக்கவும்.
 • 12.மைக்ரோவேவ் அவனை 350 டிகிரியில் 5-7 நிமிடங்கள் வைத்து மொருமொருப்பாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும்.
 • 13.வெந்ததும் வெளியே எடுத்து 5 நிமிடங்கள் ஆறவைக்கவும்.
 • 14.ப்ரட்டிற்கு இடையில் மசாலா கலவையை வைத்து பரிமாறவும்.
 • 15.மசாலா கலவையுடன் புளி சாஸ் சேர்க்கவும்.
 • 16.அத்துடன் கொத்தமல்லி சட்னி சேர்த்து பரிமாறவும்.
 • 17.தற்போது மினி வடா பாவ் தயார்.
Key Ingredients: வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, பூண்டு, இஞ்சி, சீரகம், மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, எண்ணெய், உப்பு, கடலைமாவு, உப்பு, மிளகாய் தூள், தண்ணீர், எண்ணெய், பாவ் ப்ரட், எண்ணெய், புளி கரைசல், க்ரீன் சட்னி, சுவீட் யோகர்ட்
Comments

Advertisement
Advertisement