திரங்கா புலாவ் ரெசிபி (Tiranga Pulao Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
திரங்கா புலாவ்
  • சமையல்காரர்: Jitender - Lord of the Drinks Barrel House
  • ரெசிபி பரிமாற: 2
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்கும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: சுலபம்

இந்தியாவில் எல்லோருக்கும் பிடித்தமான உணவு புலாவ். பச்சை, ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்தில் புலாவை வீட்டிலேயே எப்படி செய்வதென்பதை பார்ப்போம்.

திரங்கா புலாவ் சமைக்க தேவையான பொருட்கள்

  • ஆரஞ்சு நிறத்திற்கு:
  • 1 கப் பாஸ்மதி அரிசி, ப்ளான்ச்ட்
  • 2 மேஜைக்கரண்டி நெய்
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி இஞ்சி விழுது
  • 1/4 கப் தக்காளி விழுது
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • மிளாகாய் சாந்து
  • சுவைக்க உப்பு
  • வெள்ளை நிறத்திற்கு:
  • 1 கப் பாஸ்மதி அரிசி
  • பச்சை நிறத்திற்கு:
  • 2 மேஜைக்கரண்டி நெய்
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி இஞ்சி விழுது
  • 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் விழுது
  • 1/2 கப் கீரை சாறு
  • சுவைக்க உப்பு

திரங்கா புலாவ் எப்படி செய்வது

  • 1.அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு மேஜைக்கரண்டி நெய் ஊற்றவும். அதில் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • 2.அதில் சாதம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மற்றொரு பேனில் அதே போல நெய் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • 3.அத்துடன் இஞ்சி விழுது, மிளகாய் தூள், மிளகாய் சாந்து சேர்த்து வதக்கவும்.
  • 4.வதங்கியபின் அதில் தக்காளி விழுது, உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சாதம் வேகும்வரை மூடி வைக்கவும்.
  • 5.மற்றொரு கடாயில் மஞ்சள் தூள் மற்றும் சாதம் சேர்க்கவும். அதில் பச்சை மிளகாய் விழுது, இஞ்சி விழுது மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • 6.அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி, கீரை சாறு சேர்த்து கிளறி மூடி வைத்து வேகவிடவும்.
  • 7.ஒரு தட்டில் வைத்து ரிங் மோல்ட் வைத்து அதில் பச்சை நிற புலாவ் வைத்து அழுத்தம் கொடுக்கவும்.
  • 8.அதில் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற புலாவ்களை ஒன்றன்மீது ஒன்று வைத்து அழுத்தம் கொடுக்கவும்.
  • 9.ரிங் மோல்டை மெதுவாக எடுத்து ஒரு தட்டில் இந்த திரங்கா புலாவை சூடாக பரிமாறவும்.
Key Ingredients: பாஸ்மதி அரிசி, நெய், சீரகம், இஞ்சி விழுது, தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளாகாய் சாந்து, உப்பு, பாஸ்மதி அரிசி, நெய், சீரகம், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது, கீரை சாறு, உப்பு
Comments

Advertisement
Advertisement