டாம் யம் ப்ரான் ரெசிபி (Tom Yum Prawns Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
டாம் யம் ப்ரான்
How to make Tom Yum Prawns
 • சமையல்காரர்: Saurabh Srivastava - Aloft New Delhi Aerocity
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

வேகவைத்த இறாலில் மசாலா பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

டாம் யம் ப்ரான் சமைக்க தேவையான பொருட்கள்

 • 2 1/2 கப் ஷ்ரிம்ப் ஸ்டாக்
 • 10-12 இறால்
 • 3 1/2 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 6 மிளகாய்
 • 3 இஞ்சி துண்டு
 • 6 கஃபிர் இலைகள்
 • 2 மேஜைக்கரண்டி தாய் ரோஸ்டட் சில்லி பேஸ்ட்
 • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
 • 3 தேக்கரண்டி ஃபிஷ் சாஸ்
 • 1 லெமன்கிராஸ்
 • 6 மஷ்ரூம்

டாம் யம் ப்ரான் எப்படி செய்வது

 • 1.ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதனும் இறாலின் தலை பகுதியை சேர்த்து வேகவிடவும்.
 • 2.தண்ணீர் ஆரஞ்சு நிறத்தில் மாறும் வரை வேகவிடவும்.
 • 3.சற்று சுண்டும் வரை கொதிக்கவிட்டு தலை பகுதியை தனியே எடுத்து வைத்துவிடவும்.
 • 4.அத்துடன் லெமன்க்ராஸ், இஞ்சி, கஃபிர் இலை, மிளகாய், மஷ்ரூம் மற்றும் தாய் ரோஸ்டட் சில்லி பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும்.
 • 5.அதில் இறால் மற்றும் ஃபிஷ் சாஸ் சேர்க்கவும்.
 • 6.இறுதியாக அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.
 • 7.இறால் நன்கு வெந்தபின் சூடாக பரிமாறவும்.
Key Ingredients: ஷ்ரிம்ப் ஸ்டாக், இறால், எலுமிச்சை சாறு, மிளகாய், இஞ்சி துண்டு, கஃபிர் இலைகள், தாய் ரோஸ்டட் சில்லி பேஸ்ட், எண்ணெய், ஃபிஷ் சாஸ், லெமன்கிராஸ், மஷ்ரூம்
Comments

Advertisement
Advertisement