வடா பாவ் ரெசிபி (Vada Pav Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
வடா பாவ்
 • சமையல்காரர்: NDTV Food
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

மும்பையின் சாலை ஓரத்தில் பிரபலமான இந்த சிற்றுண்டி இனிப்பு மற்றும் மசாலா சுவையுடன் இருக்கும். இதனை வீட்டிலேயே மிகவும் எளிமையாக எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

வடா பாவ் சமைக்க தேவையான பொருட்கள்

 • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
 • 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
 • 1 தேக்கரண்டி கடுகு
 • 2 தேக்கரண்டி சோம்பு
 • 1 வெங்காயம்
 • 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் மற்றும் பூண்டு விழுது
 • 2 எண்ணிக்கை வேகவைத்த உருளைக்கிழங்கு
 • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 தேக்கரண்டி உப்பு
 • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
 • 2 தேக்கரண்டி கொத்துமல்லி
 • 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • மசாலா தயாரிக்க:
 • 9 பூண்டு
 • 5 எண்ணிக்கை சிவப்பு மிளகாய்
 • 2 தேக்கரண்டி வெள்ளை எள்
 • 1 கப் உலர்ந்த தேங்காய்
 • 2 தேக்கரண்டி வறுத்த கடலை, வறுக்கப்பட்ட
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
 • 1/2 தேக்கரண்டி புளி
 • 1 கப் கடலை மாவு
 • 1/4 கப் சோடா
 • 1 தேக்கரண்டி உப்பு
 • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
 • 4 எண்ணிக்கை பச்சை மிளகாய்

வடா பாவ் எப்படி செய்வது

 • 1.அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். அதில் பூண்டு, சிவப்பு மிளகாய், வெள்ளை எள் மற்றும் உலர்ந்த தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
 • 2.நன்கு கிளறி அதில் வறுத்த கடலை, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
 • 3.அதில் புளிக் கரைசலை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.
 • 4.ஒரு பௌல் எடுத்து, அதில் கடலை மாவு, சோடா, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 5.அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கடலை மாவை நன்கு கலந்து கொள்ளவும்.
 • 6.அரைத்து வைத்த மசாலாவை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
 • 7.உருட்டி வைத்த மாவை கடலைமாவு கலவையில் தொட்டு எடுத்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
 • 8.பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும்.
 • 9.கடாயில் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வறுக்கவும்.
 • 10.ப்ரட்டில் சட்னி தடவி, அதில் வறுத்து வைத்த பக்கோடாவை இடையில் வைக்கவும்.
 • 11.அதன் மேல் வறுத்து வைத்த பச்சை மிளகாயை தூவி அலங்கரிக்கவும்.
Key Ingredients: எண்ணெய், பெருங்காயம், கடுகு, சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு விழுது, வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கொத்துமல்லி, எலுமிச்சை சாறு, மசாலா தயாரிக்க:, பூண்டு, சிவப்பு மிளகாய், வெள்ளை எள், உலர்ந்த தேங்காய், வறுத்த கடலை, உப்பு, மிளகாய் தூள், புளி, கடலை மாவு, சோடா, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய்
Comments

Advertisement
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com