வெஜிடபிள் பக்கோடா ரெசிபி (Vegetable Pakoda Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
வெஜிடபிள் பக்கோடா
 • சமையல்காரர்: Lokesh Jarodia - Novotel Imagica Khopoli
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயம், குடைமிளகாய் மற்றும் சாட் மசாலா சேர்த்து தயாரிக்கப்படும் பக்கோடா பிடிக்காதவர்களே இருந்திட முடியாது. இதனை புதினா சட்னியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

வெஜிடபிள் பக்கோடா சமைக்க தேவையான பொருட்கள்

 • 40 கிராம் கேரட்
 • 40 கிராம் உருளைக்கிழங்கு
 • 40 கிராம் வெங்காயம்
 • 40 கிராம் குடைமிளகாய்
 • 120 கிராம் கடலை மாவு
 • 20 கிராம் சோள மாவு
 • 40 கிராம் புதினா சட்னி
 • 1 piece வாழை இலை
 • 40 மில்லி லிட்டர் எண்ணெய்
 • 1 கிராம் சாட் மசாலா

வெஜிடபிள் பக்கோடா எப்படி செய்வது

 • 1.கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் மேற்கூறிய காய்கறிகளை நறுக்கி போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
 • 2.அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் கலந்து வைத்த மசாலாவை போட்டு பொன்னிறமாக வரும்வரை வறுத்து எடுக்கவும்.
 • 3.பொரிந்தவுடன் எண்ணெயை வடித்து எடுத்து தனித்தனியே பிரித்து அதில் சாட் மசாலா சேர்த்து சாப்பிடவும்.
 • 4.புதினா சட்னியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
Key Ingredients: கேரட், உருளைக்கிழங்கு , வெங்காயம், குடைமிளகாய், கடலை மாவு, சோள மாவு, புதினா சட்னி, வாழை இலை, எண்ணெய், சாட் மசாலா
Comments

Advertisement
Advertisement