இறால் சுக்கா செய்முறை ரெசிபி (Yera Sukha Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
இறால் சுக்கா செய்முறை
இறால் சுக்கா செய்முறை
 • சமையல்காரர்: Veena Arora
 • Restaurant: The Spice Route
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

இறால் சுக்கா செய்முறை: தென்னிந்தியாவின் கடலோர மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது. நாவில் எச்சில் ஊறும் கேரளா மசாலா கலந்து வரும் இந்த ரெசிபி அட்டகாச சுவையுடன் இருக்கும்.

இறால் சுக்கா செய்முறை சமைக்க தேவையான பொருட்கள்

 • 5 gms கல் பாசி
 • 5 gms அன்னாசி பூ
 • 5 gms காய்ந்த மிளகாய்
 • 45 gms வெங்காயம்
 • 45 gms தக்காளி
 • 10 gms கறிவேப்பிலை
 • 5 gms இஞ்சி- பூண்டு விழுது
 • 5 gms மஞ்சள் தூள்
 • 3 gms மிளகாய் தூள்
 • 3 gms மல்லித்தூள்
 • 3 gms கரம் மசாலா
 • 4-5 gms உப்பு
 • 15 மில்லி லிட்டர் எண்ணெய்
 • 45 எண்ணிக்கை பெரிய இறால்
 • 30 gms குடை(சிவப்பு மற்றும் மஞ்சள்() மிளகாய்

இறால் சுக்கா செய்முறை எப்படி செய்வது

 • 1.இறாலை உப்பு மற்றும் மஞ்சலுடன் ஊறவைக்கவும்.
 • 2.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக பொறித்து எடுக்கவும்.
 • 3.சிவப்பு மற்றும் மஞ்சள் நிற குடை மிளகாய் வெட்டி வைக்கவும்.
 • 4.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அன்னாசி பூ மற்றும் காய்ந்த மிளகாயை போடவும்.
 • 5.அதன்பின் அதில் வெட்டி வைத்த வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் பூண்டு கலவையை போட்டு கோல்டன் பிரவுன் நிறம் வரும் வரை வதக்கவும்.
 • 6.அதனுடன் மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா,வெட்டிய தக்காளி மற்றும் உப்பு போட்டு தக்காளி நன்றாக வேகும் வரை வதக்கவும்.
 • 7.கடைசியாக வறுத்து இறால் மற்றும் வெட்டிய குடை மிளகாயை சேர்க்கவும்.
 • 8.வறுத்த கருவேப்பிலை மற்றும் வெட்டிய பச்சை மிளகாயை அலங்காரமாக வைத்து பரிமாறவும்.
Key Ingredients: கல் பாசி, அன்னாசி பூ, காய்ந்த மிளகாய், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி- பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு, எண்ணெய், பெரிய இறால், குடை(சிவப்பு மற்றும் மஞ்சள்() மிளகாய்

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement