வெவ்வேறு மாநிலங்களின் பிரத்யேக உணவுகள் இவைதான்!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் காலை உணவு வேறுபடும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரத்யேகமான காலை உணவு என்றுண்டு.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: May 31, 2019 13:46 IST

Reddit
10 of the Most Unusual Regional Breakfasts in India
Highlights
  • ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் பாரம்பரிய உணவு என்றுண்டு.
  • உப்பு, புளிப்பு மற்றும் இனிப்பு சுவை சேர்ந்ததுதான் மத்திய பிரதேச உணவு.
  • காஷ்மீரின் ஷீர் சாய் உப்பு சுவையில் இருக்கும்.

காலை உணவுதான் ஒரு நாளுக்கான ஆற்றலை தருகிறது.  பல மணி நேர தூக்கத்திற்கு பிறகான உணவு மிகவும் முக்கியமானது.  இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் காலை உணவு வேறுபடும்.  ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரத்யேகமான காலை உணவு என்றுண்டு.  அவை என்னவென்று பார்ப்போம்.  குஜராத்:

மாவு பொருட்கள், காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபியின் பெயர் முதியா.  இவற்றை வேக வைத்து செய்யலாம் அல்லது டீப் ஃப்ரை செய்து சாப்பிடலாம்.  பூண்டு சட்னியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.  

A post shared by Shuchi (@shujlike) on


 

மெகாலயா:

பன்றி கொழுப்பு, இரத்தம் மற்றும் சாதம் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபியின் பெயர் ஜாடோ.  இதனை சோயா பேஸ்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.  ராஜஸ்தான்:

பச்சைமிளகாயில் உருளைக்கிழங்கை ஸ்டஃப் செய்து தயாரிக்கப்படும் இந்த ஸ்நாக்ஸ் ராஜஸ்தானின் பிரத்யேக உணவு.  இதனை டோஸ்ட் செய்த ப்ரட்டுடன் அல்லது மிர்ச்சி வடா பாவுடன் சேர்த்து சாப்பிடலாம். அசாம்:

வெவ்வேறு வகையான அரிசியுடன் தயிர் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த காலை உணவு அசாம் மாநிலத்தவரால் விரும்பி சாப்பிடப்படுபவை.  A post shared by Geeta (@geeta_4u) on

காஷ்மீர்:

உப்பு சுவை மிகுந்த இந்த நூன் சாய் அல்லது ஷீர் சாய் பிங்க் நிறைத்தில் இருக்கும்.  ஹோம்மேட் பிரட்டுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். 

A post shared by Zia E (@ziae3) on

மத்திய பிரதேசம்:

ஜிலேபி மற்றும் போஹா சேர்ந்த கலவைதான் மத்திய பிரதேசத்தில் காலை உணவு.  இனிப்பு, காரம், புளிப்பு என எல்லா சுவையும் கலந்து இருக்கும்.  
 

கோவா:

பட்டாணி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ரெசிபியின் பெயர் டோனக்.  கோவாவில் பெரும்பாலானோரின் காலை உணவு இதுதான்.  
 

சத்திஸ்கர்:

அரிசி, மசாலா பொருட்கள், எள், கறிவேப்பிலை மற்றும் சிகப்பு மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த மொருமொருப்பான ரெசிபியின் பெயர் ஃபாரா.


  

தமிழ்நாடு:

மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்ட வேகவைக்கப்படும் அரிசி பதார்த்தம் தான் இந்த உப்பு உருண்டை.  கடலை பருப்பு, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி தமிழ்நாட்டின் பிரத்யேக உணவாக இருக்கிறது. Listen to the latest songs, only on JioSaavn.com
Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement