ரோஸ் வாட்டரை இப்படி பயன்படுத்துங்கள்

சருமம் மற்றும் கூந்தலுக்கு ரோஸ் வாட்டரின் நன்மைகளை பார்ப்போம்

 , NDTV   |  Updated: October 31, 2018 13:58 IST

Reddit
10 Rose Water Benefits: From Antioxidants To Anti-Aging

உலக அழகி கிளியோபட்ராவே தன் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்தியிருக்கிறார் என்பது எவ்வளவு ஆச்சரியமான விஷயம். அப்படியானால் பண்டைக்காலம் முதலே ரோஸ் வாட்டர் அழகு கலைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெளிவாக புரியவருகிறது. ரோஸ் வாட்டரை போலவே ரோஸ் எண்ணெயும் உங்கள் அழகை மெருகேற்ற பயன்படுகிறது. சருமம் மற்றும் கூந்தலுக்கு ரோஸ் வாட்டரின் நன்மைகளை பார்ப்போம்.  1. சருமத்தின் PH அளவை சீராக வைக்கிறது. மேலும் முகத்தில் அதிகபடியான எண்ணெய் சுரப்பை குறைக்கிறது.
  2. சருமம் சிவந்து போதல், முகப்பரு, அரிப்பு மற்றும் அலர்ஜி ஆகியவற்றை போக்குகிறது.
  3. சருமத்தை ஈரப்பதத்துடனும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.
  4. ஆண்டிபாக்டீரியல் தன்மை கொண்ட இது சருமத்தில் ஏற்படும் காயம், தழும்பு போன்றவற்றை குணப்படுத்தும்.
  5. ஆண்டிஆக்ஸிடண்ட் தன்மை இருப்பதால் செல்கள் மற்றும் திசுக்களை உறுதியாக வைத்திருக்கும்.
  6. சரும துளைகளின் ஆழம் வரை சென்று சுத்தம் செய்வதோடு இறுகவும் செய்கிறது.
  7. மனநிலை மற்றும் உணர்ச்சி நிலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் ரோஸ் வாட்டரின் நறுமணம் உங்களை சாந்தப்படுத்தும்.
  8. தலையில் உள்ள பொடுகை நீக்கி, கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுவதோடு கூந்தலின் வளர்ச்சியையும் அதிகரிக்க செய்கிறது.
  9. ரோஸ் வாட்டரை உங்கள் தலையணைகளில் சிறிது தெளித்து விட்டு படுத்தால் நல்ல தூக்கத்தை பெறலாம்.
  10. சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை அள்ளி தரும்.


Newsbeep

ரோஸ் வாட்டரை இப்படி பயன்படுத்துங்கள்

1. தினசரி மேக்கப் செய்த பிறகு ரோஸ் வாட்டரை முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். இதனால் முகம் பளிச்சென்று இருக்கும். தினமும் காலையில் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி வந்தால் முகம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

2. ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிசரின் இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு கலந்து பஞ்சில் நனைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு பின் கூந்தலை அலசி வந்தால், கூந்தல் மென்மையாக இருக்கும்.3. ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவிய பின், சில துளிகள் க்ளிசரின் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி வரலாம். இது முகத்திற்கு சிறந்த க்ளென்சராக இருக்கும்.

4. குளிர்ந்த ரோஸ் வாட்டரில் பஞ்சை நினைத்து கண்களின் மேல் வைக்கலாம். இதனால் கண்களில் சோர்வு மற்றும் வறட்சி மறைந்துவிடும்.

5. ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசிய பிறகு ஒரு கப் ரோஸ் வாட்டரால் கூந்தலை மேலும் ஒரு முறை அலசலாம். இது கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படும்.

6. குளிர்ந்த ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து, முகத்தில் தடவலாம். அப்படி தடவினால் சரும துளைகள் சுருங்கி முகம் பளபளக்கும்.

7. ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு மேஜைக்கரண்டி ரோஸ் வாட்டர் இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவலாம். பின் முல்தானி மிட்டி கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் பிரகாசிக்கும்.8. சில துளிகள் தேங்காய் எண்ணெயுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம்.

Listen to the latest songs, only on JioSaavn.com

9. இரண்டு மேஜைக்கரண்டி கடலை மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவினால் முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்துவிடும்.

10. ரோஸ் வாட்டர், பாதாம் எண்ணெய் மற்றும் நீங்கள் விரும்பும் மாய்சுரைசிங் க்ரீம் ஆகிய மூன்றையும் நன்கு கலந்து சருமம் முழுவதும் தடவிக் கொள்ளலாம். இது உடலுக்கு சிறந்த மாய்சுரைசிங் க்ரீமாக செயல்படும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement