குழந்தைகளுக்கு 100 சதவிகித ஆரோக்கியம் கிடைத்திட பழச்சாறுகள் கொடுக்கலாம்!!

குழந்தைகளின் உணவில் பழச்சாறுகள் சேர்க்கப்படாவிட்டால், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

Translated by: Kamala Thavanidhi (with inputs from ANI)  |  Updated: August 26, 2019 16:21 IST

Reddit
Listen Up Parents: 100% Fruit Juice May Improve Your Kids' Diet Quality, Says Study

மதிய உணவிற்கு பின் தினமும் ஒரு பழச்சாறு குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.  நம்மில் பெரும்பாலானோர்க்கு மதிய உணவிற்கு பிறகு குளிர்பானங்கள் மற்றும் சோடா பானங்கள் குடிக்கும் வழக்கம் உள்ளது.  அது நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன் ஆரோக்கியத்தையும் கெடுக்க வல்லது.  மாறாக நாம் பழங்களை சாப்பிடலாம்.  பழங்களில் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருக்கிறது.  மேலும் இதில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை சீராக்குகிறது.  பெரியவர்களுக்கு எப்படியோ அதேபோல் தான் குழந்தைகளுக்கும்.  பழச்சாறுகளை குடிப்பதனால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கிறது.  100 சதவிகம் ஆர்கானிக் பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் பழச்சாறுகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.   

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பழச்சாறுகளில் நார்ச்சத்து இல்லாதபோதும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும், பையோ ஆக்டிவ் பொருட்களும், ஃபைட்டோகெமிக்கல் போன்றவையும் இருக்கிறதென தெரிவிக்கப்பட்டது.  சர்க்கரை சேர்க்கப்படாத பழச்சாறுகளில் மக்னீஷியம், பொட்டாஷியம், வைட்டமின் சி மற்றும் குறைந்தபட்ச நார்ச்சத்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.  மேலும் பழச்சாறுகளை குடிப்பதனால் ஒட்டுமொத்த டயட் தரம் உயர்கிறதென்றும் குறிப்பிட்டுள்ளனர்.  

சிலர் குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுப்பதால் சளி தொல்லை ஏற்படும் என்று எண்ணுகிறார்கள்.  ஆனால் அது முற்றிலும் தவறான நம்பிக்கை. குழந்தைகளின் உணவில் பழச்சாறுகள் சேர்க்கப்படாவிட்டால், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.  பெரும்பாலும் பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.  அப்போதுதான் அதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து முழுமையாக கிடைக்கும்.  ஆனால், குழந்தைகள் பழங்களை அப்படியே சாப்பிட விரும்ப மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு பழச்சாறுகளை கொடுக்கலாம். Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement