11 சிறந்த தெருவோரக் கடை உணவுகள்..! அதன் ரெசிபிகள் இதோ...

தெருவீதிக் கடை உணவு ரெசிபிகள் : இந்தியாவில் இருந்து சிறந்த தெருவோர உணவு ரெசிபிகளின் பட்டியலை இங்கே காணலாம். டபேலி முதல் பானி பூரி மற்றும் ஆலு சாட் வரை, படிப்படியான செயல்முறையுடன் பார்க்கலாம்.

Translated by: Ragavan Paramasivam  |  Updated: November 19, 2019 12:06 IST

Reddit
11 Best Street Food Recipes | Delicious Street Food Recipes

இந்தியா, அதன் தனித்துவமான தெருக்கடை உணவுக்களுக்காக பிரபலமானது.

Highlights
  • தெருக்கடை உணவுகளுக்குப் பேர் போனது இந்தியா..!
  • இந்த நாட்டின் எந்த மூலை முடுக்கிலும் இதுபோன்ற கடைகளைக் காணலாம்.
  • வீட்டிலேயே முயற்சிக்க சிறந்த இந்திய தெரு உணவு ரெசிபிகள் இங்கு உள்ளது.

தெருவீதி உணவு ரெசிபிகள் : இந்திய உணவைப் பற்றி பேசும்போது, ​​முதலில் நம் மனதில் வருவது, இங்கு கிடைக்கும் தெருவோர உணவுகள் தான். தெருவோர உணவு என்பது இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரத்தின் இன்றியமையாத பகுதியாகும், இங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தனித்துவமான உணவு உள்ளது. டெல்லியின் கோல் காப்பே எனும் பானி பூரி முதல் குஜராத்தின் தபேலி மற்றும் மகாராஷ்டிராவின் வட பாவ் வரை, இந்திய வீதி உணவு ஒருபோதும் உங்களை ஆச்சரியப்படுத்தவும் உங்கள் பசியை ஆற்றவும் நிச்சயமாக மறக்காது!

வீதி உணவு என்பது அடிப்படையில் சைக்கிள் அல்லது தள்ளு வண்டிகளில் நேரடியாக விற்பனையாளர்களால் தெருக்களில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுறது. இது இப்போது சில இடங்களில் சிறிய கியோஸ்க் எனப்படும் கடைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் மாலையில் ஒரு வண்டியில் ‘நம்ப அக்கா கடை, அண்ணன் கடை' என்று நாமே உறிமையாகப் பழகக்கூடிய கடைகளிடமிருந்து ஆலு சாட்களை சாப்பிடும் திருப்தியை வேறு எதுவும் தராது.

உங்களிடம் அந்தப் பழைய நினைவுகளைப் புதுப்பிக்க, உங்கள் சுவை மொட்டுக்களை நிச்சயமாகத் தூண்டும் 11 சிறந்த தெருவோர உணவு வகைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்:

1. Gol Gappe - பானி பூரி

அனைவருக்கும் மிகவும் பிடித்தது..! பானி பூரி என்பது இந்தியாவில் மிகவும் பொதுவான தெரு உணவுகளில் ஒன்றாகும். பானி பூரி சிறிய, வட்ட வடிவ மிருதுவான ஆட்டா அல்லது சுஜி பூரிஸ் ஆகும், அவை சுவையான நீர், பிசைந்த உருளைக்கிழங்கு மற்றும் சுண்டல் மற்றும் மசாலாப் பொருட்களுடன் நிரப்பப்படுகின்றன . நாடு முழுவதும் அனைத்து விரிந்துள்ள இந்த தெரு உணவிலிருந்து அதே பல பெயர்கள் உண்டு. மகாராஷ்டிராவில் பானி பூரி என்றும், வட இந்தியாவில் உள்ள சில பகுதிகளில்  கோல் கப்பே, மேற்கு வங்காளத்தில் புச்கா, மற்றும் ஒடிசா பகுதிகளில் குப்-சுப் என்றும் அழைக்கப்படுகிறது.

gol gappe
பானி பூரி இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் தெரு உணவுகளில் ஒன்றாகும்.

2. Jhalmuri - ஜால்முரி

அரிசிப் பொரி  மற்றும் மசாலாப் பொருட்களின் கலவையான ஜால்முரி, கொல்கத்தாவிலிருந்து பிரபலமான தெரு உணவாகும். ஒரு லைட்டான ஸ்னாக்ஸ், இதை நகரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் விற்பனையாளர்கள் வண்டிகளில் விற்பனை செய்வதைக் காணலாம். இதில் கடுகு எண்ணெய் சேர்க்கப்படுவதால் ஒரு தனித்துவமான, கடுமையான சுவை கொண்டது.

jhalmuriஅரிசிப் பொரி மற்றும் மசாலாக் கலவையைக் கொண்டது ஜால்முரிPhoto Credit: NDTV Beeps.

3. Vada Pav - வட பாவ்

இந்த மகாராஷ்டிர ஸ்பெஷல் ஒரு சுவையான தெரு உணவாகும். இது மும்பையை ஒத்ததாக இருக்குகிறது. மசாலாக்களுடன் பொரித்த வடையை ரொட்டித் துண்டுகளுக்கு இடையில் வைத்து, காரமான சட்னிகளுடன் பரிமாறப்படுகின்றன. வட பாவ் மும்பையின் ஒவ்வொரு தெருவிலும் இருக்கும். இந்த நகரத்திற்குச் செல்லும் எவரும் தன் பட்டியலில் இதை சாப்பிட வேண்டுமென குறித்து வைத்திருப்பார்கள்.

7eujj9m
மும்பையின் மிகவும் பிரபலமான தெருக்கடை உணவை இப்போது உங்கள் சமையலறையில் தயாரிக்கலாம்!

4. Dabeli - தபேலி

தபேலி ஒரு முறுமுறுப்பான மற்றும் மென்மையான கலவையை ஒன்றாகக் கொண்டுள்ள ஒரு சுவாரஸ்யமான குஜராத்தி சிற்றுண்டியாகும். குஜராத்தின் கட்ச் பிராந்தியத்தில் தோன்றியதாக அறியப்படுகிறது. அங்கு தபேலியை விற்கும் கடைகள் மற்றும் ஸ்டால்களை குறுகிய பாதைகளில் கூட வரிசையாக இருப்பதைக் நீங்கள் காணலாம். சுவை மற்றும் மசாலாப் பொருட்கள் ஒத்துப் போவதால் தபேலியை வாடா பாவின் தொலைதூர உறவினர் என்றும் அழைக்கலாம்.

dabeli gujarati food street food
குஜராத்தின் தபேலியை வாடா பாவின் தொலைதூர உறவினர் என்று அழைக்கலாம்.Photo Credit: Istock

5. Paapdi Chaat - பாப்டி சாட்

பாப்டி சாட், பழைய டெல்லியின் தெருக்களில் இருந்து கிடைத்த வாயில் நீருரவைக்கும் சுவையான உணவாகும். இது மிருதுவான பாப்டி, வேகவைத்த கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, தயிர் மற்றும் சிவப்பு மிளகாய், சாட் மசாலா, சீரகத்தூள் போன்ற மசாலாப் பொருட்களைக் கொண்டு செய்யப்படுகிறது. இனிப்பு, காரம் மற்றும் புளிப்பு ஆகிய சுவைகளின் சமமான கலவையாகும். இதை எளிதாக வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கலாம்.

89fbiq0gபாப்டி சாட் டெல்லியைச் சேர்ந்த உணவாகும்

6. Momos - மோமோஸ்

இந்த தெற்காசிய உணவு வட இந்தியர்களின் இதயத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது, குறிப்பாக தில்லி மக்கள் இதை அதிகம் விரும்புகிறார்கள். கோழி, ஆட்டிறைச்சி முதல் காய்கறி மோமோஸ் வரை பலவகைகள் உள்ளன. இது சிவப்பு மிளகாய், பூண்டு மற்றும் தக்காளி ஆகியவற்றால் செய்யப்பட்ட சட்னியுடன் சிறப்பாக வழங்கப்படுகிறது.

momos
மோமோஸை அசைவ மற்றும் சைவ மூலப்பொருட்களை சேர்த்து செய்யலாம்.

7. Chole Bhature - சோலா பூரி

நம் சுவை மொட்டுகளை தூண்ட இதன் பெயரே போதுமானது.! சோல் பாத்துரே என்பது வட இந்தியாவின் ஒவ்வொரு உணவகத்திலும் தெருவிலும் நீங்கள் காணக்கூடிய மிகச்சிறந்த பஞ்சாபி உணவாகும், குறிப்பாக நீங்கள் டெல்லி மற்றும் பஞ்சாபைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் இதைக் அதிகம் காணலாம். இந்த சூடான மற்றும் மிருதுவான பூரியை சுவைமிக்க சோலேவுடன் (கொண்டைக்கடலை கிரேவி) சேர்த்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் வட இந்திய குடும்பத்தில் காலை உணவாக இடம் பிடித்திருக்கும்.

i89d62e
சோலா பூரியை ஒரு வேளைக்கான  முழு உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம்..!

8. Khasta Kachori - கஸ்தா கச்சோரி

இந்தூரில் மிகவும் பிரபலமான உணவான இந்த கஸ்தா கச்சோரி ஒரு மிருதுவான வறுத்த, காரமான சிற்றுண்டியாகும். இதை இனிப்பு மற்றும் புளி சட்னியுடன் பரிமாறும்போது யாராக இருந்தாலும் தவிர்க்கமாட்டார்கள். இதில் கருப்பு உளுந்து மற்றும் மசாலாப் பொருட்களின் களவையுடன் நிரப்பப்படுகிறது.

0bs8j3g8
கச்சோரியை வீட்டிலும் சுவையாக செய்யலாம்.

9. Samosa - சமோசா

மழைக்காலத்தின் அல்டிமேட் பார்ட்னராக இந்த சூடான சமோசாக்கள் இருக்கும். ஒரு கப் டீயுடன் நீங்கள் இதை அனுபவிக்க விரும்புவீர்கள்.! எந்த அறிமுகமும் தேவையில்லாத, தேசத்தின் மிகவும் விரும்பப்படும் சிற்றுண்டிகளில் ஒன்று சமோசாக்கள். முக்கோண மாவுக்குள் காரமான உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி கலவையுடன் அடைக்கப்பட்டு, முழுமையை வறுத்தெடுப்பக்கப்பட்ட இந்த பண்டத்தை நம்மில் எவராலும் மறுக்க முடியாது.

samosa
சமோசா நிச்சயமாக ஆல் டைம் ஃபேவொரேட் ஸ்னாக்காக இருக்கும்!

10. Aloo chaat - ஆலு சாட்

உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு  இந்த உணவு ஒரு சொர்க்கம்.! நாம் எப்போதும் தெரு உணவைப் பற்றி குறிப்பிடும் போது, ஆலு சாட்டை மறக்க முடியாது. இது ஒவ்வொரு தெருக்கடை உணவு பிரியர்களின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. ஒரு உணவுப் பிரியருக்கு இந்த சிறிதாக நறுக்கிய, மசாலாக்களுடன் பொரிக்கப்பட்ட உருளைக்கிழகை சாப்பிடாமல் மனம் நிறைவடையாது.

dilli ki fried aloo chaat
ஆலு சாட்டை நிச்சயமாக எல்லோரும் சுவைத்துப் பார்க்கவேண்டும்..

11. Jalebi - ஜிலேபி

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த இனிப்பு வகையைப் பற்றி கூறாமல் சுவையான தெருவோரக் கடை உணவுகளின் பட்டியலை நிறைவு செய்ய முடியாது.  சுருண்ட, சூடான மற்றும் அதிக இனிப்பு கொண்ட ஜிலேபியை நாம் எப்போதாவது வேண்டாம் என்று சொல்ல முடியுமா.? சர்க்கரை பாகில் நனைந்த இந்த இனிப்பு, ஆனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும். அவை பெரும்பாலும் இந்திய வீடுகளில் பண்டிகை, கொண்டாட்ட சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படுகின்றன.

6qo2gn5
எளிய முறையில் தயாரிக்ககூடிய இனிப்பு வகையாகும்

இப்போது, ​​இந்த பட்டியலில் இருக்கும் எல்லா உணவையும் தெருக்களில் தேடிப் பிடித்து சாப்பிடுங்கள். இல்லையெனில். வீட்டிலேயே செய்து உண்டு மகிழுங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்கள்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement