உடல் எடையை குறைக்க 16:8 டையட் இருக்கு!

   |  Updated: August 24, 2018 15:01 IST

Reddit
16:8 Diet: Would You Try This Diet That Promotes Intermittent Fasting To Lose Weight?

உடல் எடை குறைப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால், உணவு பிரியர்களுக்கான பிரத்யேக 16:8 டையட் முறை உடல் எடை குறைக்க உதவுகிறது. 16:8 என்றால், தினமும் 8 மணி நேரத்திற்கு உணவு உண்டு, 16 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருக்க வேண்டும். இந்த உணவு முறையின் மூலம், உடல் எடை குறைக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது
 

di1e39m

8 மணி நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு

1. அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்
2. காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்று நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்
3. மீன்,நட்ஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்
4. ப்ளாக் டீ, மூலிகை டீ போன்ற பானங்களை எடுத்துக் கொள்ளலாம்

Newsbeep

16:8 டையட் உடல் எடை குறைக்க உதவுமா?

16:8 டையட் முறையில், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 8 மணி நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். மீதமுள்ள 16 மணி நேரத்திற்கு உணவு உண்ண கூடாது. உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள 23 நபர்களிடம், 16:8 டையட் குறித்து ஆய்வு நடைப்பெற்றது. இதில், 16:8 டையட் முறையை பின்பற்றியவர்களுக்கு உடல் எடை குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல் இரத்த அளவு சீராக அமைந்துள்ளதாகவும் கண்டிறியப்பட்டது. எனினும், 16:8 டையட் முறை குறித்து மேலும் பல ஆய்வுகள் நடைப்பெற உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

Listen to the latest songs, only on JioSaavn.com

veggies 650

முக்கியமாக, 16 மணி நேரம் உணவு உண்ணாமல் இருக்க வேண்டும் என்பதால், கர்ப்பிணி பெண்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், இந்த உணவு முறையை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்

ஆரோக்கியமான உணவு வகைகளை 8 மணி நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கட்டுப்பாடான உணவுகளை சாப்பிடவும். இந்த முறையை பின்பற்றுவதற்கு முன்பு, மருத்துவர்களின் பரிந்துரை பெற வேண்டும்.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement