காலை உணவிற்கு பதிலாக இந்த ஸ்மூத்தியை குடிக்கலாம்!!

 100 கிராம் பாதாமில் 21 கிராம் புரதம் இருக்கிறது.  100 கிராம் வால்நட்டில் 15 கிராம் புரதம் இருக்கிறது.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: September 09, 2019 16:25 IST

Reddit
Weight Loss: 2 High-Protein Breakfast Drink Recipes For Strong Start Of The Day

காலை உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டுமே அந்நாளுக்கான ஆற்றல் நமக்கு கிடைக்கும்.  மேலும் உடலில் மெட்டபாலிசம் சீராக இருக்கும்.  அத்துடன் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து கொள்ளும் உணவே சிறந்தது.  முடிந்தவரை காலை உணவை ஆரோக்கியமானதாக்க வேண்டும்.  எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவை உட்கொள்வதால் நாள் முழுக்க உற்சாகத்துடன் செயல்பட முடியும்.  குறிப்பாக புரதம் நிறைந்த உணவை உட்கொள்வது சிறந்தது.  

உங்களுக்கு ஏற்படக்கூடிய பசியை போக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் புரதம் மிகவும் முக்கியமானது.  உடல் எடை குறைக்கவும், செரிமானத்தை சீராக வைக்கவும் புரதம் தேவைப்படுகிறது.  காலை உணவிற்கு பதிலாக புரதம் நிறைந்த ஸ்மூத்தியை வீட்டிலேயே தயாரித்து குடிக்கலாம்.  ஆளிவிதை மற்றும் பாதாம் ஆகிய இரண்டிலும் புரதம் அதிகமாக இருக்கிறது.  இவற்றை கொண்டு ருசியான ஸ்மூத்தியை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.  

1. ஆளிவிதை ஸ்மூத்தி: 
ஆளிவிதையை பல்வேறு ரெசிபிகளில் சேர்க்கலாம்.  இதில் ஏராளமான சத்துக்கள் இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  100 கிராம் ஆளிவிதையில் 18 கிராம் புரதம் மற்றும் கால்சியம் இருக்கிறது.  இந்த ஸ்மூத்தி தயாரிக்க சோயா மில்க், பாதாம் மில்க் அல்லது யோகர்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.  

2. பாதாம் குங்குமப்பூ மில்க்‌ஷேக்: 
உடல் எடை குறைக்க அதிகபடியான புரதம் நிறைந்த மில்க்‌ஷேக் குடித்து வரலாம்.  பாதாம், ஆளிவிதை, வால்நட் மற்றும் குங்குமப்பூ சேர்த்து மில்க்‌ஷேக் குடித்து வரலாம்.  100 கிராம் பாதாமில் 21 கிராம் புரதம் இருக்கிறது.  100 கிராம் வால்நட்டில் 15 கிராம் புரதம் இருக்கிறது.  இவை அனைத்தையும் சேர்த்து மில்க்‌ஷேக் செய்து குடிக்கும்போது உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைத்துவிடும்.  

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement