கலோரிகள் குறைவான 3 ஆப்பிள் சாலட் ரெசிபிகள்!!

ஆப்பிளை சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி வைத்து கொள்ளவும்.  அத்துடன் நட்ஸ், செலரி, மையோனிஸ் ஆகியவை சேர்த்து சுவையான சாலட் செய்து சாப்பிடலாம். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 22, 2019 14:24 IST

Reddit
Healthy Diet: 3 Delicious Apple Salad Recipes For A Light Nutritious Meal
Highlights
  • ஆப்பிளில் கலோரிகள் மிகவும் குறைவு.
  • உடல் எடை குறைக்க ஆப்பிளை சாப்பிடலாம்.
  • ஆப்பிளில் சாலட் செய்து சாப்பிடலாம்.

உலகம் முழுக்க ஆப்பிள் விளைவிக்கப்பட்டும் சாப்பிடப்பட்டும் வருகிறது.  ஆப்பிளை கொண்டு பல சுவையான டெசர்ட் ரெசிபிகள் செய்யப்படுகிறது.  பைஸ், பேஸ்ட்ரி, டார்ட் போன்ற ரெசிபிகள் எல்லோராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.  ஆப்பிளில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது.  தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் உபாதைகள் நம்மை நெருங்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  கலோரிகள் குறைந்த பழங்களுள் ஆப்பிளும் ஒன்று.  100 கிராம் ஆப்பிளில் 52 கலோரிகள் இருக்கிறது.  மேலும் 100 கிராம் ஆப்பிளில் 2.4 கிராம் நார்ச்சத்து, 10 கிராம் சர்க்கரை இருக்கிறது.  நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து இரண்டுமே ஆப்பிளில் இருப்பதால் உடல் எடை குறைப்பதற்கு இதனை சாப்பிடலாம்.  இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்.  இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இருதய நோய்களை தடுக்கிறது.  ஆப்பிளில் பாலிஃபினால் என்னும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.  டைப் 2 நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது.  ஆப்பிள் கொண்டு தயாரிக்கப்படும் சில சாலட் ரெசிபிகளை பார்ப்போம். 

v3agt47g 

ஆப்பிள் பைன் நட் சாலட்:

ஆப்பிள் மற்றும் பைன் நட் இரண்டிலுமே ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.  வெங்காயம், செர்ரி டொமேட்டோ, சோம்பு, ராக்கெட் இலைகள், ஆப்பிள் மற்றும் பைன் நட்ஸ் ஆகியவை சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். 

qvd4olqg 

கொய்யா, காட்டேஜ் சீஸ் மற்றும் ஆப்பிள் சாலட்:

கொய்யாவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.  இதில் வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.  கொய்யா, ஆப்பிள், காட்டேஜ் சீஸ், முளைக்கட்டிய தானியங்கள், வெள்ளரி ஆகியவை சேர்த்து ஆரோக்கியமான சாலட் செய்து சாப்பிடலாம். வால்ட்ராஃப் சாலட்:

ஆப்பிளை சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி வைத்து கொள்ளவும்.  அத்துடன் நட்ஸ், செலரி, மையோனிஸ் ஆகியவை சேர்த்து சுவையான சாலட் செய்து சாப்பிடலாம்.  இவற்றுடன் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து சாப்பிடலாம்.  இதனால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கிறது. Comments(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com