இஞ்சி நீண்ட நாள் கெடாமல் இருக்க இதை செய்யுங்கள்!!!

சிலர் இஞ்சி கெட்டு போகாமல் இருக்க, வோட்கா, ரைஸ் ஒயின், வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி வைப்பார்கள்.  இப்படி பாதுகாக்கும் போது, இஞ்சியின் இயற்கை மணமும், ருசியும் மாறிவிடும். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 25, 2019 12:46 IST

Reddit
Kitchen Hacks: 3 Easy Ways Of Increasing The Shelf-Life Of Fresh Ginger Roots
Highlights
  • இந்திய சமையலில் இஞ்சிக்கு முக்கிய பங்கு உண்டு.
  • இஞ்சியை சரியாக பராமரிக்காவிட்டால் காய்ந்து அதன் தன்மையை இழந்துவிடும்.
  • இஞ்சியை தொடர்ச்சியாக உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

இஞ்சி காரத்தன்மை மிகுந்தது.  இந்திய உணவுகளில் இஞ்சி, அதன் ருசிக்காகவும், மருத்துவ குணங்களுக்காகவும் சேர்க்கப்படுகிறது.  எல்லோர் வீட்டு சமையலறையிலும் இஞ்சியின் பயன்பாடு இருக்கும்.  இஞ்சியின் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை கொண்டது.  இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு வீக்கத்தை குறைக்கிறது. இஞ்சியின் நன்மைகள்:

இஞ்சியில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடலில் கொலஸ்ட்ரால் சேராது.  இஞ்சியில் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின் சி உள்ளதால் இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  மேலும் இஞ்சியில் ஆண்டிபைரெடிக், ஆனால்ஜெஸிக் மற்றும் ஆண்டிபாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது.  இதனால் செரிமான மண்டலம் சரியாக இயங்கும்.  குமட்டல், வயிறு உப்புசம் ஆகியவற்றை சரி செய்கிறது.  இஞ்சி சருமம் மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.  இஞ்சி காய்ந்து போகாமல் இருக்க சில வழிகளை பார்ப்போம்.

o9agd3n

 

1. இஞ்சியை தோல் உறித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.  ஒரு ஸிப் லாக் பௌச்சில் இஞ்சி துண்டுகளை போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.  இவ்வாறு வைக்கும்போது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். 2. நீங்கள் தினமும் இஞ்சி பயன்படுத்துவீர்கள் என்றால், இஞ்சியை தோல் சீவி மைய அரைத்து காற்று புகாத க்ளாஸ் ஜாரில் போட்டு வைக்கவும்.  இந்த ஜாரை ஃப்ரிட்ஜில் வைத்து தேவையான அளவு எடுத்து பயன்படுத்தவும். 

kqob9f18 

3. நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்த விரும்பாவிட்டால் ஒரு பேப்பர் டவலில் சுற்றி வைக்கலாம்.  ஆனால் காய்கறிகளுடன் வைக்கும் போது, நன்கு சுற்றி மற்ற காய்கறிகளுடன் கலந்து விடாமல் வைத்து கொள்ள வேண்டும்.  இப்படி வைக்கும் போது அது சில வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். சிலர் இஞ்சி கெட்டு போகாமல் இருக்க, வோட்கா, ரைஸ் ஒயின், வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி வைப்பார்கள்.  இப்படி பாதுகாக்கும் போது, இஞ்சியின் இயற்கை மணமும், ருசியும் மாறிவிடும்.  அவ்வப்போது சமைக்கும் போது ஃப்ரஷாக பயன்படுத்துவதே சிறந்தது.  

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement