உடல் எடை குறைய வேண்டுமா?? இந்த சூப் குடித்து பாருங்களேன்!!!

தினசரி சூப் குடிப்பதாலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு கலோரிகளும் குறைவாக கிடைக்கிறது. 

   |  Updated: April 29, 2019 17:03 IST

Reddit
Weight Loss: 3 Healthy Vegetable Soup Recipes For Weight Loss
Highlights
  • உடல் எடை குறைக்க சூப் குடிக்கலாம்.
  • நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை தேர்வு செய்யலாம்.
  • உடல் எடை குறைப்பிற்கான இந்த சூப்பில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

உடல் எடை குறைய உடற்பயிற்சி தவிர உணவு பழக்கங்களாலும் உடல் எடை குறைக்க முடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.  புரதம் நிறைந்த காய்கறிகள் மற்றும் இறைச்சியை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் உடல் எடை தானாக குறையும்.  தினசரி சூப் குடிப்பதாலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு கலோரிகளும் குறைவாக கிடைக்கிறது.  சில சூப் ரெசிபிகளை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

க்ளியர் வெஜிடபிள் சூப்:

ப்ரோகோலி மற்றும் கேரட் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சூப் வைட்டமின், மினரல் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.  ப்ரோகோலியில் ஃபோட்டோ கெமிக்கல் இருப்பதால் உடலில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது.  கேரட்டில் கலோரிகள் மிக குறைவு என்பதால் உடல் எடை குறைக்க கேரட் சாப்பிடலாம்.  இந்த க்ளியர் வெஜிடபிள் சூப்பை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். 

Newsbeepj0du1l8g

 

தேவையானவை:

ப்ரோகோலி - 1 கப்

கேரட் - 1 கப்

குடைமிளகாய் - 1 கப்

பட்டாணி - 1 கப்

பூண்டு - 6 பல்லு

வெங்காயம் - 1

உப்பு - சுவைக்கேற்ப

மிளகு - சுவைக்கேற்ப

தண்ணீர் - 21/2 கப்

எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் இருந்து அதிகமான சூட்டிற்கு மாற்றவும்.

2. எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்த பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

3. அதில் பொடியாக நறுக்கி வைத்த கேரட், குடைமிளகாய், பட்டாணி, ப்ரோகோலி ஆகியவற்றை சேர்த்து 2-4 நிமிடங்கள் வரை வதக்கவும்.

4. அதில் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். 

5. காய்கறிகள் வெந்தபின் அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.

மஷ்ரூம் சூப்:

சைவ மற்றும் அசைவ பிரியர்கள் இருவருமே மஷ்ரூமை விரும்பி சாப்பிடுவார்கள்.  மஷ்ரூம் சுவையாக மட்டுமில்லாமல் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராகவும் வைக்கிறது.  இதில் புரதம் அதிகம் என்பதால், உடலில் மெட்டபாலிஸத்தை அதிகரித்து உடலில் கொழுப்பு சேராமல் பார்த்து கொள்கிறது.  ருசியான மற்றும் ஆரோக்கியமான மஷ்ரூம் சூப் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

mushroom soup

தேவையானவை:

பட்டன் மஷ்ரூம் - 1 கப்

கார்ன் மாவு - 1 தேக்கரண்டி (1/4 ஸ்லிம் மில்க் கலந்தது)

வெங்காயம் - 1

உப்பு - சுவைக்கேற்ப

பால் - 1 கப்

மிளகு - சுவைக்கேற்ப

தண்ணீர் - 2 கப்

செய்முறை

1. ஒரு பேனில் மஷ்ரூம் மற்றும் பால் சேர்த்து மென்மையாக வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும். 

2. ஆறிய பின் அதனை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

3. ஒரு பேனில் வெங்காயத்தை நறுக்கி போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக வரும்வரை வதக்கி கொள்ளவும்.  அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்துவிடவும். 

4. வதங்கிய பின் அதனை தனியே எடுத்து வைக்கவும். 

5. இப்போது அரைத்து வைத்த மஷ்ரூமை பேனில் சேர்த்து அதில் தண்ணீர் சேர்த்து கலந்து மூன்று நிமிடங்கள் வரை குறைவான சூட்டில் வைக்கவும்.

6. அதில் கலந்து வைத்த கார்ன் மாவு மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

7. இப்போது அடுப்பை குறைவாக வைத்து அந்த கலவை க்ரீமியாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும்.

8. சூடாக பரிமாறவும்.

காலிஃப்ளவர் சூப்:

காலிஃப்ளவரில் அதிகபடியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.  அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், 100 கிராம் காலிஃப்ளவரில் 25 கலோரிகள் இருக்கிறதென்று தெரிவித்திருக்கிறார்கள்.  கலோரிகள் மிகவும் குறைவான இந்த காலிஃப்ளவரை கொண்டு எப்படி ஆரோக்கியமான சூப் தயாரிப்பது என்று பார்ப்போம்.

9hoatgo

தேவையானவை:

காலிஃப்ளவர்

நறுக்கிய வெங்காயம்

நறுக்கிய உருளைக்கிழங்கு

ஆலிவ் எண்ணெய்

பூண்டு

க்ரீம்

வெஜிடபிள் ஸ்டாக்

செய்முறை

1. ஒரு பேனில் பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

2. அதில் காய்கறிகள் வேக வைத்த நீரை சேர்த்து வேகவிடவும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

3. மேலும் அதில் க்ரீம் சேர்த்து நன்கு மைய வேக வைக்கவும். 

4. சுவையான இந்த சூப்பை சூடாக பரிமாறவும். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement