முகப்பருக்களை நீக்க ஆயுர்வேத தீர்வுகள்

முகப்பருக்களைக் நீக்குவதற்கான பல இயற்கை வைத்தியங்களைக் கொண்டிருக்கிறது ஆயுர்வேதம்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: July 30, 2018 23:55 IST

Reddit
3 Home Remedies Suggested By Ayurveda To Manage Acne

முகப்பருக்களைக் நீக்குவதற்கான பல இயற்கை வைத்தியங்களைக் கொண்டிருக்கிறது ஆயுர்வேதம்.
முகப்பரு என்பது எண்ணெய் மற்றும் இறந்த செல்களால் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் பலருக்கும் வரும் பொதுவான பிரச்னை இது. முகப்பரு உடையும் போது நிலைமை மோசமாகி விடும். வீட்டிலேயே முகப்பருவை சரிசெய்யலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தில் முகப்பரு வராமல் தடுக்கவும் அதனை கட்டுபடுத்தவும் பல வழிகள் உள்ளன. ஆயுர்வேதத்தில் முகப்பரு “யாவான் பிடிகா” என்று அழைக்கப் படுகிறது. 

இது தோலின் அடிப்பகுதியில் செயலாற்றி சூடான நச்சுக்களை உருவாக்கி அதை உடையச் செய்கிறது. இதை தவிர்க்க சரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆயுர்வேததின் பரிந்துரையின் படி, எண்ணெயில் பொரித்த, மசாலா அதிகமாக உள்ள உணவுகள் மற்றும் புளித்த உணவுகளை தவிர்ப்பது நலம். 

வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஆயுர்வேத முறைகள்:

தினமும் நெல்லிச் சாறு உட்கொண்டு வந்தால் முகப்பருக்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். நெல்லிக்காய் இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் சரும பாதுகாப்பிற்காக பெரிதும் நம்பப்படும் பொருளாகும். இதில் 20 மடங்குகிற்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி ஆண்டி ஆக்ஸிடென்ட்ஸ் முகப்பரு மற்றும் அதனால் வரும் தீங்குகளிலிருந்து பாதுகாக்கிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com

சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவை சேர்த்த டீ எடுத்துக் கொள்வதால் உடலைக் குளிர்ச்சியாகவும் சீரான வெப்பநிலையுடன் வைத்துக் கொள்ள முடியும். டாக்டர் வசந்த் அலட் எழுதிய “The complete book of ayurvedic home Remedies” என்ற புத்தகத்தில் அனைத்து குறிப்புகளும் தெளிவாக உள்ளன. மேற்கூறிய மூன்றையும் 1/3 டீஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, வடிக்கட்டி மூன்று முறைக் குடித்துவந்தால் நல்ல பலன் தரும்.

முலாம் பழத்தை ஸ்கின்னில் அப்ளை செய்து வருவதால் தோலின் ஆரோக்கியம் பாதுகாக்கப் படும். முலாம் பழத்தை தூங்க செல்வதற்கு முன்பு முகத்தில் தடவிவிட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். இதிலுள்ள குளிர்ச்சித் தன்மை ஆண்டி பிட்டா தன்மையை அதிகரித்து முகப்பருவை குணமாக்குகிறது. ஆனால் இது அனைத்து சருமத்திற்கும் ஏற்றதாக அமையாது. எனவே உபயோகப்படுத்தும் போது ஏதேனும் எரிச்சல் இருந்தால் உபயோகிக்காமலிருப்பது நல்லது. முகப்பரு சாதாரணமாக ஏற்படும் ஒன்று தான், அது அடிக்கடி உடையவும் செய்யும்.கூடுதலாக ஏதேனும் மருத்துவ உதவி கூடத் தேவைப்படலாம் ஆகவே சரும நிபுணர்களையோ மருத்துவர்களையோ அனுகுவது சிறந்தது.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  AcneAyurveda

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement