பூண்டு வாசனையை தடுக்க!

பல மணி நேரங்கள் வரை இந்த வாசனையானது வாயில் இருந்து கொண்டே இருக்கும்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 28, 2018 20:01 IST

Reddit
3 Natural Home Remedies To Get Rid Of Garlic Breath

ரெட் சாஸ் பாஸ்தா, சில்லி நூடுல்ஸ் போன்றவற்றை நம்மால் சாப்பிடாமல் இருக்க முடியாது.  இவற்றில் பூண்டு நிச்சயம் சேர்க்கப்படுகிறது.  இது உடல் நலத்திற்கு எப்படி ஆரோக்கியத்தை தருகிறதோ அதேபோல் இதனை சாப்பிட்ட பின் வாயில் பூண்டு வாசனையும் விட்டு செல்கிறது.  சில நேரங்களில் இது அறுவறுக்க தக்கதாகவும் இருக்கிறது.  பல மணி நேரங்கள் வரை இந்த வாசனையானது வாயில் இருந்து கொண்டே இருக்கும்.  இதனை எப்படி போக்குவது என்பது குறித்து பார்ப்போம். 

1.க்ரீன் டீ

க்ரீன் டீயில் பாலிஃபினால் என்னும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.  சூவிங் கம் அல்லது புதினா சாப்பிடுவதை காட்டிலும் க்ரீன் டீயை குடித்து வந்தால் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.  கிரீன் டீ வாயில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டுள்ளது.  பூண்டு சேர்க்கப்பட்ட உணவை சாப்பிட்ட பின் நீங்கள் க்ரீன் டீ குடிக்கலாம். 

green tea

 

2.எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது.  இது வாயில் இருக்கக்கூடிய துர்நாற்றத்தை போக்கிவிடும்.  ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறுடன் ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கலந்து குடித்து வரலாம்.  இந்த கலவை கொண்டு 2-3 முறை வாய் கொப்பளித்தும் வரலாம்.  இதனால் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.

lemon juice

 

3. ஆப்பிள்

நிறைய பூண்டு சேர்க்கப்பட்ட உணவு சாப்பிட்ட பின் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம்.  வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை ஆப்பிளுக்கு உண்டு.  நீங்கள் புதினாவை கூட வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.  உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement