நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சூப் குடிக்கலாம்!

காலிஃப்ளவரில் வைட்டமின் சி இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 06, 2019 14:49 IST

Reddit
Healthy Monsoon Diet: 3 Immunity-Boosting Soup Recipes To Keep Handy
Highlights
  • செரிமானத்திற்கு எளிமையாக இருப்பது சூப்.
  • பசி நேரத்தில் சூப் குடிப்பதால் உடல் எடை குறையும்.
  • காலிஃப்ளவரில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது.

கோடைக்காலம் மற்றும் குளிர்காலம் என எந்த பருவக் காலத்திலும் ஏற்றது சூப்.  இந்த சூப்பில் காய்கறிகள், மூலிகைகள், இறைச்சி மற்றும் மற்ற ஆரோக்கிய பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சூப் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை தருவதுடன் ஆரோக்கியத்தையும் அள்ளித் தருகிறது.   சூப்பில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் தினமும் கூட இதனை பருகலாம்.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில சூப் வகைகளை பார்ப்போம்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

பாசிப்பருப்பு கிவி சூப்: 
பாசிப்பருப்பில் புரதம் அதிகமாக இருக்கிறது.  கிவி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  தேங்காயில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் அடங்கியிருக்கிறது.  கிவியில் வைட்டமின் சி இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் ருசியும் அருமையாக இருக்கும்.  

காலிஃப்ளவர் மற்றும் கார்ன் சூப்: 
காலிஃப்ளவரில் வைட்டமின் சி இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.  100 கிராம் காலிஃப்ளவரில் 80 சதவிகித வைட்டமின் சி இருக்கிறது.  கார்ன் மற்றும் காலிஃப்ளவரில் பாஸ்தா, பிட்சா மற்றும் சூப் தயாரித்து சாப்பிடலாம்.  

Comments

p17rh28g இறால் சூப்: 
இறால், கடம்பா மற்றும் சீ பாஸ் போன்றவை சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம்.  இதில் சிங்க், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், புரதம், ஆண்டிஆக்ஸிடண்ட் போன்றவை இருப்பதால் இருதய ஆரோக்கியம் சீராக இருப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.  


(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement