மழைக்காலத்திற்கு ஏற்ற ஹெல்தி டீ ரெசிபி!!

கிராம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசி மொக்கு ஆகிய மசாலா பொருட்கள் சேர்த்து டீ தயாரித்து குடிப்பதால் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.  

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 08, 2019 12:49 IST

Reddit
Healthy Monsoon Diet: 3 Immunity Boosting Teas To Stay Healthy This Monsoon
Highlights
  • மஞ்சளில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.
  • பட்டை, கிராம்பு போன்ற மசாலா பொருட்கள் கொண்டு டீ தயாரிக்கலாம்.
  • துளசி,இஞ்சி மற்றும் ஏலக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

மழைக்காலம் துவங்க இருக்கும் நேரத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும்.  பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நோய் தொற்று கிருமிகளால் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.  மழைக்காலத்தில் தெருவோர கடைகளில் கிடைக்கும் பலகாரங்கள் மற்றும் உணவு பொருட்களை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் உண்டாகும்.  அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை தினமும் உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.  உதாரணமாக தயிரில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடிய தன்மை இருக்கிறது.  அதேபோல இஞ்சி, துளசி, மசாலா, பட்டை போன்ற இயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்ட ஹெர்பல் டீ தயாரித்து குடிக்கலாம்.  இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.  

தேன், எலுமிச்சை இஞ்சி டீ: 
தேனில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருக்கிறது.  செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.  மேலும் அடிக்கடி தேன் சாப்பிடுவதால் தொண்டை கரகரப்பு குணமாகிறது.  எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளதால் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது.  செரிமானத்தை அதிகரிக்க இஞ்சி சிறந்த மூலிகை.  இதனை கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம்.  
 

Comments

ke2sbmro டீடாக்ஸ் ஹல்தி டீ: 
மஞ்சளில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.  இஞ்சி எப்படி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறதோ அதேபோல மஞ்சளும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  மஞ்சள் கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம். 
detox haldi tea மசாலா சாய்: 
கிராம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசி மொக்கு ஆகிய மசாலா பொருட்கள் சேர்த்து டீ தயாரித்து குடிப்பதால் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.  மழைக்காலத்திற்கு ஏற்ற பானம்.  
fljh1k8 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement