வெறும் மூன்று பொருள் இருந்தால் போதும்.. நல்ல டேஸ்டியான சாக்லேட் ஸ்வீட் ரெசிபி ரெடி!!

இந்த வீடியோவை ஹனிபோபபியர் என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது கிட்டத்தட்ட 2 லட்சம் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

   |  Updated: August 19, 2020 17:39 IST

Reddit
This Viral 3-Ingredient Chocolate Truffle Recipe Is So Easy, Even Kids Can Make It

மூன்று மூலப்பொருள் இதற்குத் தேவை. சாக்லேட் பிஸ்கட், கிரீம் சீஸ் மற்றும் வெள்ளை சாக்லேட்

Highlights
  • Chocolate truffle balls can easily be made with this viral recipe
  • This three-ingredient recipe is an easy way to make it at home
  • Take a look at the full recipe shared on Instagram

நாம் ஒரு எளிய உணவை சாப்பிட்டாலும் அல்லது நல்ல வகைவகையாக முக்குப்புடைக்க சாப்பிட்டாலும் - சாப்பிட்டப் பிறகு ஸ்வீட் சாப்பிட வேண்டும் போல் இருக்கும். ஒரு சுவையான இனிப்பு பலகாரம் தான் சிறந்த உணவை நிறைவு செய்கிறது. சிலர் ஐஸ்கிரீம் விரும்புவார்கள், இன்னும் சிலர் மில்க் ஷேக், சாக்லேட் ஷேக் போன்றவைகளை விரும்புவார்கள். 

அந்த வகையில், சாக்லேட், பால், ஐஸ்கிரீம் அனைத்தின் கலவையாக ஒரு சூப்பரான டெசர்ட் செய்முறை இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இது பார்ப்பதற்கு சாக்லேட் டிலேசியஸ் போன்று இருந்தாலும், கெட்டி பாலும், அதிகளவும் இனிப்பும் இருப்பதால், வீடியோவைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறச் செய்யும்.

Newsbeep

(Also Read: )இந்த வீடியோவை ஹனிபோபபியர் @honeybobabear என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது கிட்டத்தட்ட  2 லட்சம் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இந்த  ரெசிபியின் செய்முறை மிகஎளிதாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இந்த இன்ஸ்டாகிராம் பயனர் பல்வேறு விதமான ரெசிபிகளை செய்து அசத்துகிறார். இருப்பினும் இந்த சாக்லேட் மஸ்ரூம் ரெசிபி தான் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

மூன்று பொருட்களுடன் சாக்லேட் ரெசிபி:
மூன்று மூலப்பொருள் இதற்குத் தேவை. சாக்லேட் பிஸ்கட், கிரீம் சீஸ் மற்றும் வெள்ளை சாக்லேட் சில்லுகள் ஆகும். முதலாவதாக, ஒரு முழு மூட்டை சாக்லேட் பிஸ்கட் ஒரு பிளெண்டரில் நன்றாக தூளாக்கப்பட்டன. இந்த தூள் பின்னர் எட்டு அவுன்ஸ் அல்லது 1 கப் கிரீம் சீஸ் உடன் சேர்க்கப்படுகிறது. கொஞ்ச தூள் அடுத்த பயன்பாட்டிற்காக ஒதுக்கி வைக்கப்படுகிறது. இது ஒரு தடிமனான சாக்லேட் கலவையை உருவாக்கியது, பின்னர் அது சிறிய பந்துகளாக உருட்டப்பட்டு சுமார் 30 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது.

Listen to the latest songs, only on JioSaavn.com

சாக்லேட் பந்துகள் குளிர்ந்த நிலையில் எடுத்து, வெள்ளை சாக்லேட் சில்லுகள் சேர்க்கப்படுகின்றன. பின்னர், மைக்ரோவேவில் சுமார் 30 விநாடிகள் உருக்கப்படுகின்றன. பின்னர், ஒரு ஸ்பூன் அல்லது ஸ்பேட்டூலாவின் உதவியுடன் அவள் வெள்ளை சாக்லேட்டை ஒரு தடிமனான, கிரீமி கலவையாக உருவாக்கப்படுகிறது. 

இதற்குப் பிறகு, சாக்லேட் பந்துகளை குளிர்சாதன பெட்டியில் இருந்து மீட்டெடுத்து வெள்ளை சாக்லேட் கலவையில் சேர்க்கப்படுகிறது. மீதமுள்ள சாக்லேட் தூள் சாக்லேட் உணவு பண்டங்களுக்கு மேல் தெளிக்கப்பட்டு, இறுதி இனிப்பு மேலும் 10 நிமிடங்களுக்கு குளிரூட்டப்படுகிறது. 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement