ருசியான மஷ்ரூம் சூப் தயாரிப்போமா?

100 கிராம் மஷ்ரூமில் 22 கலோரிகள் இருக்கிறது.  மேலும் மஷ்ரூமை உலர்த்தி பொடியாக்கியும் சில காபி, ஸ்மூத்தி போன்றவற்றில் பயன்படுத்துகின்றனர்.

   |  Updated: October 01, 2019 16:27 IST

Reddit
Healthy Diet: 3 Mushroom Soup Recipes For Fans Of The Edible Fungus
Highlights
  • ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் மஷ்ரூமும் ஒன்று.
  • மஷ்ரூமில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
  • மஷ்ரூம் கொண்டு ருசியான சூப் ரெசிபிகளை தயாரித்து வரலாம்.

 மஷ்ரூம் இயற்கையாகவே சுவை மிகுந்ததாக இருக்கிறது.  நாம் சாப்பிடக்கூடிய மஷ்ரூம்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நன்மைகளும் அடங்கியிருக்கிறது.  இதனை கொண்டு ருசியான சூப் தயாரித்து குடிக்கலாம்.  மார்கெட்களில் தினசரி கூட மஷ்ரூம்கள் கிடைக்கின்றன.  இவற்றில் கலோரிகள் மிகவும் குறைவு.  100 கிராம் மஷ்ரூமில் 22 கலோரிகள் இருக்கிறது.  மேலும் மஷ்ரூமை உலர்த்தி பொடியாக்கியும் சில காபி, ஸ்மூத்தி போன்றவற்றில் பயன்படுத்துகின்றனர்.  மஷ்ரூமை நீங்கள் பாஸ்தா, பீட்சா, பஃப்ஸ், சூப் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.  மஷ்ரூம் கொண்டு எப்படி ஆரோக்கியம் நிறைந்த சூப் ரெசிபியை தயாரிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.  bogmvge8 

கிரீம் ஆஃப் மஷ்ரூம்: 
ப்ரோக்கோலி, மஷ்ரூம், சீரகம், மிளகு மற்றும் உப்பு சேர்த்து செய்யப்படும் இந்த சூப் ரெசிபியை பிரஷர் குக்கரில் தயாரிக்கலாம்.  இந்த சூப் கிரீமியாக இருக்கும்.  அலங்கரிப்பதற்காக கூட ஃப்ரெஷ் கிரீம் சேர்க்க தேவையில்லை.  

Listen to the latest songs, only on JioSaavn.com

கிளியர் சூப்: 
மஷ்ரூம், தைம் மற்றும் சில மூலிகை பொருட்களை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க வைக்கும்போது, அதன் ஆரோக்கியம் மற்றும் ருசி அதில் மெல்ல இறங்கும்.  மழைக்காலத்தில் இந்த சூப் தயாரித்து குடித்து வந்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.  

qt40d9h8
 

பாதாம் மற்றும் மஷ்ரூம் சூப்:
ரீஃபைண்டு மாவு, தண்ணீர், பால், பாதாம் மற்றும் ஏற்கனவே வதக்கி வைத்த மஷ்ரூம் சேர்த்து சுவையான சூப் தயாரிக்கலாம்.  இந்த சூப்பில் உப்பு, மிளகு தூள் மற்றும் கிரீம் சேர்த்து குடிக்கலாம்.  கெட்டியாகவும், கிரீமியாகவும் இருக்கும் இந்த சூப் ஆரோக்கியம் நிறைந்தது.  

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement