3 விதமான வெஜ் ஃப்ரைட் ரைஸ்... சில நிமிடங்களில் ரெடி... முயற்சி செய்து பாருங்களேன்!

கடைகளில் மட்டுமல்ல வீட்டிலும் ஃப்ரைட் ரைஸ் சமைக்கலாம். இதற்கு மூலப்பொருட்களும், மசாலாப் பொருட்களும் இருந்தாலே போதுமானது.

Edited by: Barathraj  |  Updated: July 25, 2020 13:17 IST

Reddit
3 Quick And Yummy Vegetarian Fried Rice Recipes You’d Thank Us For

வெஜ் ஃப்ரைட் ரைஸ் மூன்று விதமாக செய்ய முடியும். இந்த மூன்றும் ஒவ்வொன்றும் ஒரு ரகம்.

Highlights
  • Fried rice is an excellent way to use up your leftover rice
  • It is very easy to make fried rice
  • Fried rice is an Asian dish

எவ்வளவு நாளைக்குதான் இந்த சாம்பார் சாதத்தையே சாப்பிட.. வித்தியாசமாக ஏதாவது வேண்டாமா என்பவர்கள் பலர் உண்டு. அவர்களுக்காகவே தற்போது சூப்பரான, டேஸ்டான வெஜ் ஃப்ரைட் ரைஸ். அதுவும் மூன்று விதமான சுவைகளில்..

அரிசியை வேக வைத்து, பின்பு அதனை காய்கறி, மசாலாப் பொருட்களுடன் வறுத்தெடுப்பதுதான் ஃப்ரைட் ரைஸ். இது ஆசிய உணவு வகைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு இடமாக இந்த வகை உணவு பரவி, தற்போது தமிழகத்திலும் எல்லா கடைகளிலும் ஃப்ரைட் சமைக்கப்படுகிறது. சிலருக்கு வறுத்த உணவு வகைகள், எண்ணெய், நெய் சற்று தூக்கலாக இருக்கும் உணவுகள் பிடிக்கும். அவர்களுக்கு ஃப்ரைட் ரைஸ் என்பது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது சாப்பிடத் தோன்றும்.

கடைகளில் மட்டுமல்ல வீட்டிலும் ஃப்ரைட் ரைஸ் சமைக்கலாம். இதற்கு மூலப்பொருட்களும், மசாலாப் பொருட்களும் இருந்தாலே போதுமானது. அதிலும், வெஜ் ஃப்ரைட் ரைஸையே மூன்று விதமாக செய்ய முடியும். இந்த மூன்றும் ஒவ்வொன்றும் ஒரு ரகம், ஒரு தனிச்சுவை. இதோடு சாஸ் சேர்த்து சாப்பிடும் போது, சாப்பிட்டப்பிறகும் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தோன்றும்.

1. வெஜ் ஃப்ரைட் ரைஸ்: 
மசாலா, சோயா சாஸ் மற்றும் கேரட், பச்சை பீன்ஸ், முட்டைக்கோஸ், பேபி கார்ன் மற்றும் பூண்டு போன்ற காய்கறிகள் ஆகியவை மட்டும் ஃப்ரைட் ரைஸில் சேர்ப்பது ஒருரகம்.  இதனை முதல் ஸ்பூன் சாப்பிட்டாலே உங்களுக்குப் பிடித்து விடும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

dmlus4pg

2. மஸ்ரூம் ஃப்ரைட் ரைஸ்:
உயர்தர சைவ ஹோட்டல்களில் சிக்கன் போன்று மஸ்ரூம் பயன்படுத்தப்படுகிறது. சிக்கன் சாப்பிடாதவர்கள் கூட, மஸ்ரூமை சிக்கன் என்று நினைத்துக் கொண்டு சுவைப்பார்கள். சுருக்கமாக சொன்னால், சைவப்பிரியர்களின் சிக்கன் என்று மஸ்ரூமை சொல்லாம். 

இத்தகைய மஸ்ரூமை ஃப்ரைட் ரைஸிலும் சேர்க்கலாம். அரிசி, வினிகர், சோயா சாஸ் மற்றும் மிளகாய் சாஸுடன் சமைத்த காளான் துண்டுகள் சேர்த்து செய்யும் மஸ்ரூம் ஃப்ரைட் ரைஸ் செம்ம டேஸ்டியாக இருக்கும். 8e8uukgg

3. மீல் மேக்கர் ஃப்ரைட் ரைஸ் :
பொதுவாக சைவ குருமா, குழம்பு வகைகளில், பொரியல்களில் மீல் மேக்கர் பயன்படுத்தப்படுகிறது. இது சோயா சஙக்ஸ் ஆகும். அந்தவகையில், இதனை வெஜ் ஃப்ரைட் ரைஸ்களிலும் சேர்த்து சுவையைக் கூட்டலாம்.  மீல் மேக்கர், குடமிளகாய், பச்சை பீன்ஸ், பட்டாணி, கேரட் மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து செய்யும் இது மூன்றாவது வகை ஃப்ரைட் ரைஸ் ரகமாகும்.

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement