புரதத் தேவைக்கு கினோவா சாலட் தான் பெஸ்ட்!!

புரதம் நிறைந்த சாலட் சாப்பிட ஆசைப்பட்டால், நீங்கள் கினோவாவுடன் பருப்புகளை சேர்த்து சாப்பிடலாம்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: September 09, 2019 12:55 IST

Reddit
Healthy Diet: 3 Stellar Quinoa Salad Recipes For A High-Protein Meal

உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்திருக்கும் கினோவாவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  இதனால் உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு உடல் எடை குறையவும் செய்கிறது.  பண்டைக்காலம் முதலே இந்த கினோவா உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது.  க்ளூட்டன் ஃப்ரீ உணவான இதனை கொண்டு சாலட் தயாரித்து சாப்பிடலாம்.  

கினோவாவில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது.  100 கிராம் கினோவாவில் 64 கிராம் கார்போஹைட்ரேட், 7 கிராம் நார்ச்சத்து, 14 கிராம் புரதம் மற்றும் 368 கிலோ கலோரிகள் இருக்கிறது.  மேலும் இதில் வைட்டமின் பி9 அல்லது ஃபோலேட் மற்றும் கோலின் இருக்கிறது.  கல்லீரல் நோய்கள், அதிரோஸ்க்ளீரோசிஸ் மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் தடுக்கப்படுகிறது.  இந்த கினோவா கொண்டு ஆரோக்கியம் நிறைந்த சாலட்களை தயாரிக்கலாம்.  
 

g48i6j88 

 

1. மேண்டரின் கினோவா சாலட்: 
வேகவைத்த கினோவாவுடன் ஆரஞ்சு, கிரான்பெர்ரி போன்ற பழங்களை சேர்த்து சாப்பிடலாம்.  இதனை இன்னும் ஆரோக்கியம் மிக்கதாக மாற்ற சூரியகாந்தி விதை, ஆலிவ் ஆயில் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கொள்ளலாம்.  

2. கோகனட் லைம் கினோவா சாலட்: 
இந்த சாலட்டில் ஏராளமான நன்மைகள் அடங்கியிருக்கிறது.  ரெட் ஆனியன், ஊதா நிற முட்டைக்கோஸ், ஆரஞ்சு, அவகாடோ ஆகியவற்றுடன் கினோவா சேர்த்து சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை தயாரிக்கலாம்.  இதில் கொழுப்பு சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.  

3. கினோவா லெண்டில் சாலட்: 
புரதம் நிறைந்த சாலட் சாப்பிட ஆசைப்பட்டால், நீங்கள் கினோவாவுடன் பருப்புகளை சேர்த்து சாப்பிடலாம்.  இவை இரண்டிலும் அதிகபடியான புரதம் இருக்கிறது.  மேலும் ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கிறது.  
  

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com