ஆண்களை தாக்கும் ப்ராஸ்டேட் கேன்சருக்கு மஷ்ரூம்தான் சிறந்த தீர்வு!

மஷ்ரூமில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.  அடிக்கடி சேர்த்து கொள்வதால் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். 

Translated by: Kamala Thavanidhi (with inputs from IANS)  |  Updated: September 09, 2019 16:08 IST

Reddit
Eating Mushrooms 3 Times A Week Cuts Risk Of Prostate Cancer: Study

தினசரி மஷ்ரூமை உணவில் சேர்த்து கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  இதில் வைட்டமின் டி சத்து அதிகமாக இருக்கிறது.  மேலும் கலோரிகள் குறைந்த உணவுகளில் இதுவும் ஒன்று.  மஷ்ரூமை சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஏற்படும் ப்ராஸ்டேட் கேன்சர் குணமாகும் என்று சில ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.  ப்ராஸ்டேட் சுரப்பி என்பது ஆண்களின் விந்தணுவை பாதுகாக்கும் தன்மை கொண்டது.  வாரத்தில் மூன்று முறை மஷ்ரூம் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய ப்ராஸ்டேட் புற்றுநோயின் அபாயம் தடுக்கப்படுகிறது.  

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 40 வயது முதல் 79 வயது வரையுள்ள ஆண்களுள் சுமார் 36,499 பேர் கலந்து கொண்டனர்.  இவர்கள் அனைவருமே 13.2 வருடங்கள் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டனர்.  இதில் 3.3 சதவிகிதத்தினர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.  மேலும் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மஷ்ரூம் சாப்பிட்டு வந்தவர்களுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோயின் அபாயம் இல்லாதிருந்தது.  மேலும் வாரத்தில் மூன்று முறைக்கு மேல் மஷ்ரூம் சாப்பிட்டு வந்தவர்களுக்கு புற்றுநோயின் அபாயம் 17 சதவிகிதமாக குறைந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.  

ஆகையால் உணவில் அடிக்கடி மஷ்ரூமை சேர்த்து கொள்வது நல்லது.  மஷ்ரூமில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.  அடிக்கடி சேர்த்து கொள்வதால் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement