உடல் எடை குறைக்கும் கொண்டைக்கடலை ரெசிபீஸ்!!

கொண்டைக்கடலையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 06, 2019 13:13 IST

Reddit
High-Protein Diet: 4 Chickpea Or Chana Dishes You Can Include In Your Weight Loss Diet
Highlights
  • உடல் எடை குறைக்க புரதம் அவசியம்.
  • புரதம் சாப்பிடுவதால் க்ரெலின் என்னும் ஹார்மோன் சீராகும்.
  • கொண்டைக்கடலையில் உடலுக்கு தேவையான புரதம் இருக்கிறது.

கொண்டைக்கடலையில் வைட்டமின், தாதுக்கள், ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் புரதம் நிறைந்திருக்கிறது.  இதில் இருக்கக்கூடிய புரதம் உங்களை தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  பசியை தூண்டக்கூடிய க்ரெலின் என்னும் ஹார்மோனை சீராக சுரக்க செய்கிறது.  உடல் எடை குறைக்கவும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  கொண்டைக்கடலை கொண்டு ருசியான மற்றும் ஆரோக்கியமான ரெசிபிகளை செய்து சாப்பிடலாம்.  

ஹம்மஸ்: 

கொண்டைக்கடலை கொண்டு தயாரிக்கப்படும் ஹம்மஸ் ருசியில் அலாதியானது.  இத்துடன் நீங்கள் விரும்பும் மூலிகைகள் சேர்த்து தயாரிக்கலாம்.  இதனை பிரட், பராத்தா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.  
 

nj674is8

த்ரீ பீன் சாட்: 

காராமணி, கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, தக்காளி, வெள்ளரிக்காய், எண்ணெய், சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாலட் போல செய்து சாப்பிடலாம்.

sd468r5g

கொண்டைக்கடலை கீரை சூப்: 

உடல் எடை குறைக்க சூப் தான் சிறந்த உணவு.  பழச்சாறுகளில் நார்ச்சத்து இருப்பதில்லை.  உடல் எடை குறைக்க நார்ச்சத்து மிகவும் முக்கியமானது.  கீரைகளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.  கீரை சூப்புடன் கொண்டைக்கடலையும் சேர்த்து சாப்பிடுவதால் புரதம் மற்றும் நார்ச்சத்து கிடைக்கிறது.  

spinach soup 625

வெண்டைக்காய் மற்றும் கொண்டைக்கடலை: 

வெண்டைக்காய், கொண்டைக்கடலை, புதினா, செர்ரி தக்காளி, துளசி, ப்ளாக் ஆலிவ் ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement