கோடையை குளுமையாக்க எனர்ஜி நிறைந்த கிவி ட்ரிங்ஸ்!

இந்த சம்மரில் கிவியை ஸ்டாக் வைத்துக் கொண்டு ஜூஸ், சாலட் என அனைத்தும் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 04, 2019 12:21 IST

Reddit
4 Energy-Packed Kiwi Drinks You Must Drink To Beat The Heat This Summer
Highlights
  • இந்த கோடையில் கிவியை கொண்டு ஜூஸ் தயாரித்திடுங்கள்.
  • கிவியில் வைட்டமின் மற்றும் மினரல் இருக்கிறது.
  • இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது.

இந்த கொதிக்கிற வெயில்ல சூடா டீ குடிப்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இந்த கோடை காலத்தில் நமக்கு இருக்கும் ஒரே நன்மை என்னவென்றால் குளிர்ச்சியான பானங்கள். அதுவும் உடலுக்கு ஹெல்தியாக இருத்தல் அவசியம். அதற்கு பெஸ்ட் தீர்வு பழங்கள்தான். அதில்தான் ஊட்டச்சத்துகள் நிரம்பி இருக்கிறது. உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது. டேஸ்ட்டுக்காக நீங்கள் பலவிதமான பழங்களை முயற்சி செய்யலாம். ஆப்பிள், வாழைப்பழம், கிவி என ஏகப்பட்ட பழங்கள் இருக்கின்றன. அதில் மிகச்சிறந்த ஒன்று கிவி. கிவியைக் கொண்டு டெஸர்ட்ஸ், கேக்ஸ், யோகர்ட், சாலட் என விதவிதமாக செய்து சாப்பிடலாம். 

கிவி ஏன் உடலுக்கு நல்லது?

ஆரஞ்சு,  எலுமிச்சையை விட கிவியில்தான் அதிக அளவு வைட்டமின் C உள்ளது!

இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தைத் தூண்டி உடலில் கொழுப்பு தேங்காமல் தடுக்கிறது.

இதில் மினரல்களான கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

கிவியின் விதைகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது.

kiwi margarita

கிவியில் உள்ள நற்குணங்கள் உங்கள் முகத்துக்கு பிரகாசம் அளித்து வெயிலில் இருந்து பாதுகாக்கிறது. இப்படி ஏராளமான பலன்களை தன்னுள் வைத்திருக்கும் கிவியில் செய்யக்கூடிய ரெசிப்பிகளைப் பார்ப்போம்.

mango kiwiகிவி மார்கரிட்டா (Kiwi Margarita)

மிகவும் சோர்வாக இருக்கிறதா? உடல் எடையைப் பற்றிய கவலையும் இருக்கிறதா? உங்களுக்கு இந்த  ட்ரிங்ஸ்தான் பர்ஃபெக்ட் சாய்ஸ். இந்த காக்டெயில், டெக்கிலா, ஆரஞ்சு, லெமன் மற்றும் கிவியால் தயாரிக்கப்பட்டது. நாள் முழுவதும் உழைத்த உங்களுக்கு புத்துணர்ச்சி அளித்து உற்சாகமாக வைக்கும்.

melon kiwi smoothieமேங்கோ கிவி ஃபஸ் (Mango Kiwi Fuzz)

மாம்பழங்கள் இல்லாத கோடையை நினைத்துப் பார்க்க முடியுமா? மாம்பழத்தின் இனிப்பும், கிவியின் சுவையும் உங்களுக்கு அலாதியான சுவையை தந்து புத்துணர்வு அளிக்கும். வீட்டிலேயே செய்தால் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.

cucumber and kiwi juiceமெலன் அண்ட் கிவி ஃப்ரூட் ஸ்மூத்தி (Melon And Kiwi Fruit Smoothie)

வெறும் மில்க் ஷேக்குகள் எல்லாம் இப்பொழுது பழசாகிவிட்டது. பழங்கள் நிறைந்த ப்ளெண்டட் மில்க் ட்ரிங்க்ஸ்தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். இதில் கிவி, ஓட்ஸ், தேன், மெலன் கலந்த ஒரு கிளாஸ் உங்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியது.குகும்பர் அண்ட் கிவி ஜூஸ் (Cucumber And Kiwi Juice)

இது சாதாரண ட்ரிங்க்ஸ் இல்லை. நீங்கள் தினமும் சாப்பிடும் பழங்களில் நிறைந்துள்ள சத்துகள் அடங்கியது. இதில் சிறிது இஞ்சி சேர்ப்பதனால் இன்னும் ஹெல்தியான ட்ரிங்ஸாக மாறும் இது சம்மருக்கு ஏற்றது.

கிவி ஒரு பவர்ஃபுல் ஆண்டிஆக்ஸிடண்டாக இருப்பதால், ஹெல்துக்கும் மட்டுமல்லாமல் சருமத்துக்கும், முடிக்கும் நல்லது. இந்த சம்மரில் கிவியை ஸ்டாக் வைத்துக் கொண்டு ஜூஸ், சாலட் என அனைத்தும் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement