உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்

ஜீரண மண்டலம் சரியாக வேலை செய்யாவிட்டால், மலச்சிக்கல், உடல் எடை அதிகரிப்பு, போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுத்துவிடும்.

एनडीटीवी फूड डेस्क  |  Updated: February 12, 2019 17:25 IST

Reddit
4 Herbs That Could Naturally Boost Digestion 

நவீன வாழ்க்கை முறையில் அனைவரும் கவனிக்கத் தவறுவது உடலின் ஜீரண மண்டலம் சரியாக செயல்படுகிறாதா என்பதைத் தான். ஜீரண மண்டலம் சரியாக வேலை செய்யாவிட்டால், மலச்சிக்கல், உடல் எடை அதிகரிப்பு, போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுத்துவிடும். நல்வாய்ப்பாக நம்முடைய அடுப்படியிலேயே இதற்கான மருந்துகள் இருக்கிறது. அவை சீரண சக்தியை அதிகரித்து உடல் நலனை மேம்படுத்துகிறது. இந்த பொருட்களை உணவுகளில் எடுத்துக் கொள்ளுங்கள் உங்களின் சீரண சக்தியின் மேம்பாட்டை நீங்களே உணர்வீர்கள்.

 1. இஞ்சி 

வயிற்றுப் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு சிறந்த மருந்து இஞ்சி மட்டுமே. ‘ஹீலிங் புட்ஸ்' என்ற உணவில் “இஞ்சி குடலை பாதுகாக்கிறது. இரைப்பை குடல் வழியாக உணவு இயக்கத்தை துரிதப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் வாயுப் பிடிப்புகளை குறைக்கிறது. நாவின் சுவை மொட்டுக்களை விழிப்படையச் செய்கிறது” ஆயுர்வேதத்தில் இஞ்சியை அக்னி என்று குறிப்பிடுகின்றனர். இது உடலின் செரிமான நெருப்பை ஊக்குவிக்கிறது. “ஆயுர்வேத வீட்டு வைத்திய முறைகள்” என்ற புத்தகத்தில் “ஒவ்வொரு முறையும் உணவிற்கு முன் இஞ்சியுடன் சிறிது எலுமிச்சை சாறுகலந்து அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டு வந்ததால் செரிமான சக்தி அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

kqob9f18
 

2. மிளகு

கருப்பு மிளகில் உள்ள பைபர்னைன் என்ற கலவையால் நிறைந்துள்ளது. இது செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இயற்கையாகவே மிளகானது உணவை நமது உடலில் ஏற்றுக்கொள்ள வைக்கும் அளவிறு செரிமானத்தை மேம்படுத்துகிறது. மிளகு ஹைட் ரோ குளோரிக் அமிலத்தின் சுரப்பை அதிகரிக்கிறது.  

3. ஓமம் 

ஓமத்தில் செரிமானத்தை அதிகரிக்கும் என்சைம்கள் உள்ளது. ஆரோக்கியமானவகையில் இதை அன்றாடம் பயன்பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் சீரகம், ஓமம், 1/2 டீஸ்பூன் இஞ்சி பொடி ஆகியவைற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இதனால் செரிமான சக்தி அதிகரித்து மலச்சிக்கலை குறைக்கிறது.

 4. கிராம்பு

கிராம்பு அனைத்து விதமான வயிறு மற்றும் குடல் பிரச்னைகளை தீர்க்கக் கூடியது. கிராம்பு டீ போட்டு தினம் குடித்து வரலாம். அல்லது தண்ணீரில் கிராம்பை ஊறப்போட்டு குடித்து வருவது உடலுக்கு நன்மையளிக்கும்.

b2gbbhlo

மேலே சொன்ன பொருட்களை உணவில் சேர்த்து பாருங்கள் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

 
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com