முக அழகை பராமரிக்க இந்த பேஸ் மாஸ்கை பயன்படுத்தலாம்

இரவு நேரத்தில் முகத்தில் பயன்படுத்த கூடிய பேஸ் பேக்

   |  Updated: October 03, 2018 23:52 IST

Reddit
4 DIY Overnight Face Masks For Healthy Skin

பரபரப்பான வாழ்க்கை சூழலில் உங்களுக்கென நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் சிரமமானதாக இருக்கும். சரியான உணவு, நல்ல தூக்கம், மாதம் ஒருமுறை அழகு நிலையத்திற்கு சென்று கூந்தல் மற்றும் சரும பராமரிப்புகளை கவனித்து கொள்ள நேரம் இல்லாமல் இருப்பதுதான் எல்லோரது அவல நிலையும். கவலை வேண்டாம். பார்லருக்கு சென்றுதான் உங்கள் அழகை பராமரிக்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே உங்கள் முக அழகை மெருகேற்ற முடியும். குறிப்பாக இரவு தூங்க செல்லும் முன் உங்கள் மேக்கப்களை நீக்கிவிடுவது மிகவும் அவசியமானது. இரவு நேரத்தில் முகத்தில் பயன்படுத்த கூடிய பேஸ் பேக்-களை நீங்கள் பயன்படுத்தியது உண்டா? அதற்கான சில எளிய டிப்ஸ்களை உங்களுக்காகவே இங்கே கொடுத்துள்ளோம்.

Newsbeep

பால் மற்றும் மஞ்சள் பேஸ் மாஸ்க்

முகத்தில் உள்ள கருமையை போக்கக்கூடிய தன்மை பாலிற்கு உண்டு. சூரிய ஒளியினால் ஏற்படும் கருமை நிறத்தை மாற்றக்கூடிய தன்மை பாலில் உள்ள லேக்டிக் அமிலத்திற்கு உண்டு. அதேபோல் மஞ்சள் சிறந்த கிருமிநாசினி. இதில் ஆண்டிபாக்டீரியல் தன்மை உண்டு என்பதால் பால் மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டையும் சேர்த்து, முகத்தில் அப்ளை செய்தால் முகம் பிரகாசிக்கும்.

lemon and turmeric

செய்முறை

ஒரு பௌலில் 5-6 தேக்கரண்டி பால் ஊற்றி, அதில் 4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். வாரம் 3 அல்லது 4 முறை செய்து வரலாம்.

முட்டையின் வெள்ளை கரு

உங்கள் சருமம் மிருதுவாகவும், வனப்புடனும் இருக்க முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளை கருவில் வைட்டமின் ஏ இருக்கிறது. இது முகத்தில் உள்ள துளைகளை சுருக்கிவிடும். வயது முதிர்ச்சியை தடுக்கும் தன்மை முட்டையின் வெள்ளை கருவில் உள்ளது.

egg white.

செய்முறை

முட்டையை உடைத்து அதன் வெள்ளை கருவை மட்டும் தனியே எடுத்து ஒரு பௌலில் ஊற்றி வைக்கவும். அதனை முகம் முழுவதும் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி விடலாம் அல்லது இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலை எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவலாம். வாரம் 2 அல்லது 3 முறை இப்படி செய்து வரலாம்.

ஓட்ஸ் மற்றும் தேன் பேஸ் மாஸ்க்

ஓட்ஸில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி இன்ப்ளமேட்டரி குணங்கள் இருப்பதால், முகத்தில் இருக்கக்கூடிய தழும்புகள், கரும்புள்ளி போன்றவை சரிசெய்யும். வரண்ட சருமத்தை சரிசெய்து, முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டது ஓட்ஸ். சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள தேன் உதவும். சரும வறட்சியை போக்கி சருமத்தை க்ளென்ஸ் செய்கிறது. வறண்ட உதடு, மூட்டுகளுக்கு தடவி வரலாம்.

oats 625

செய்முறை

ஒரு பௌலில் ஒரு மேஜைக்கரண்டி ஓட்ஸ் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கி, முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து, காலையில் கழுவி விடலாம். இதனால், உங்கள் சருமம் பளிச்சிடும்.

தக்காளி பேஸ் மாஸ்க்

சோர்வான முகத்தை பளிச்சிட வைக்கும் தன்மை தக்காளிக்கு உண்டு. தினமும் தக்காளி சாறு அல்லது விழுதை முகத்திற்கு தடவி வந்தால் முகம் பிரகாசமாகும்.

tomatoes can insomnia

செய்முறை

Listen to the latest songs, only on JioSaavn.com

ஒரு பௌலில் இரண்டு 2 தேக்கரண்டி பால் எடுத்து கொள்ளவும். ஒரு தக்காளியை எடுத்து இரண்டாக வெட்டி அதை அந்த பாலில் நனைத்து, முகத்தில் தடவி காய்ந்தவுடன் மீண்டும் ஒருமுறை இதேபோல் பாலில் தொட்டு முகத்தில் தடவ வேண்டும். இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் குளிர்ந்த நீரில் முகம் கழுவலாம்.

இந்த பேஸ் மாஸ்க்குகளை குறைந்த பட்சமாக அரை மணிநேரம் வைத்திருந்து கழுவி விடலாம். அல்லது நீங்கள் விரும்பினால் இரவு முழுவதும் கூட வைத்திருக்கலாம். தொடர்ச்சியாக இரவு நேரத்தில் இதுபோன்ற பேஸ் மாஸ்க் போடும்போது சருமம் எப்போதுமே பொழிவாக இருக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement