உடல் எடையை குறைக்க இந்த ஹெல்த் ட்ரின்க் ட்ரை பன்னுங்க!

உடல் எடையை குறைக்க, சீரான உடற் பயிற்சியுன் ஆரோக்கியமான உணவு வகைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: September 06, 2018 13:10 IST

Reddit
Weight Loss: 4-Ingredient Drink To Lose Weight And Burn Belly Fat

உடல் எடையை குறைக்க, சீரான உடற் பயிற்சியுன் ஆரோக்கியமான உணவு வகைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை வெளியேற்றினால், உடல் எடை குறையும். இஞ்சி, புதினா, எலுமிச்சை, வெள்ளரி போன்று பொருட்களை வைத்து வீட்டிலேயே தயாரிக்க கூடிய ஆரோக்கியமான ஹெல்த் ட்ரின்க் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. இந்த 4 பொருட்களின் நன்மைகளை பற்றியும், ஹெல்த் ட்ரின்க் செய்முறை குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளது

1.இஞ்சி

சீரான செரிமானம் ஏற்படுவதற்கு இஞ்சி பயன்படுகிறது. எனவே, தினமும் ஒரு கிளாஸ் இஞ்சி தண்ணீர் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்

ginger juice

2.புதினா

உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை வெளியேற்ற புதினா பயன்படுகிறது. புதினா இலையில் உள்ள மென்தால் எனப்படும் எண்ணெய், வயிற்று பிரச்சனைகள், அஜீரண கோளாறு ஆகிவற்றை நீக்குகின்றன.

3.எலுமிச்சை

உடல் எடையை குறைக்க, கலோரிகளை வெளியேற்ற வேண்டும். எலுமிச்சையில் உள்ள டையுரேடிக் சத்து உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை வெளியேற்ற உதவுகின்றன. மேலும், எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து உள்ளது. எனவே, எலுமிச்சை உடல் எடையை குறைக்க உதவும்

lemon has bleaching properties

4.வெள்ளரி

நார்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. உடல் எடை குறைக்க தேவையான குறைந்த கலோரி அளவு உணவுகளை எடுத்துக் கொள்ள வெள்ளரிக்காய் சாப்பிடலாம்

ஹெல்த் ட்ரின்க் செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெள்ளரி, புதினா, எலுமிச்சை, இஞ்சி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். அதிக அளவு தண்ணீர் சேர்த்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். 8 முதல் 10 மணி நேரங்களுக்கு குளிரூட்டவும். பின்னர், குளிரூட்டப்பட்ட நீரை பருகவும். காலை உணவு எடுத்துக் கொள்வது முன்பு ஒரு முறையும், இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் நீரும் பருக வேண்டும். இதனுடன், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், உடற் பயிற்சி செய்ய வேண்டும். இந்த பழக்கங்களை தொடர்ந்தால், உடல் எடை குறையும்

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com