உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஹெல்தி ஜூஸ்!!

மஞ்சள், இஞ்சி, கேரட், ஆரஞ்சு ஆகிய நான்கு பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் டீடாக்ஸ் டிரிங் உடலை தூய்மைப்படுத்தும். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 19, 2019 18:13 IST

Reddit
Weight Loss: This 4-Ingredient Healthy Juice May Help You Detox
Highlights
  • நச்சுக்களை வெளியேற்றும் டீடாக்ஸ் ட்ரிங்க் குடிக்கலாம்.
  • மஞ்சளில் குர்குமின் எனும் பொருள் இருக்கிறது.
  • இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.

நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் ஏராளமான நச்சுக்கள் இருக்கிறது.  அவை நம் உடலில் தேங்கி கல்லீரல் பாதிப்படையும்.  கல்லீரல் பாதிப்படைந்தால் உடல் உறுப்புகள் முழுவதுமே பாதிப்படையும்.  ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.  மஞ்சள், இஞ்சி, கேரட், ஆரஞ்சு ஆகிய நான்கு பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் டீடாக்ஸ் டிரிங் உடலை தூய்மைப்படுத்தும்.  இதனை தொடர்ச்சியாக குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கலோரிகள் குறையும்.  மஞ்சளில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.  மேலும் குர்குமின் என்னும் பொருள் இருப்பதால் ஆர்த்திரிரிடிஸ், குடல் நோய்கள், நீரிழிவு நோய், இருதய நோய்கள் போன்றவை குணமாகும்.  இவற்றை கொண்டு சுவையான ரெசிபிகளை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையானவை:

கேரட் – 3

மஞ்சள் – 2-3 இஞ்ச்

ஆரஞ்சு – 2

இஞ்சி – 1 இஞ்ச்செய்முறை:

மஞ்சள் மற்றும் இஞ்சியின் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.  கேரட்டை சுத்தமாக கழுவி தோல் நீக்கி கொள்ளவும்.  வெட்டி வைத்தவற்றுடன் ஆரஞ்சு சேர்த்து அரைத்து கொள்ளவும். 

பின் அதனை வடிகட்டி குடிக்கலாம். 

நார்ச்சத்துடன் வேண்டுமென்று நினைத்தால் அப்படியே குடிக்கலாம்.  உடல் எடை குறைக்க இதனை அடிக்கடி குடித்து வரலாம்.  மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் இதனை குடிக்கலாம். Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com