சிவப்பு அரிசியுடன் இந்த ரெசிபிகளை சேர்த்து சாப்பிடலாம்!!

உடல் எடை குறைக்கவும், செரிமானம் மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் சிவப்பு அரிசியை சாப்பிடலாம்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 24, 2019 15:42 IST

Reddit
Indian Cooking Tips: 4 Red Rice Recipes To Try At Home

சிவப்பு அரிசியில் அந்தோசையனின் என்னும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலில் வீக்கம், அலர்ஜி, புற்றுநோய் போன்ற உடல் உபாதைகள் தடுக்கப்படுகிறது.  உடல் எடை குறைக்கவும், செரிமானம் மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் சிவப்பு அரிசியை சாப்பிடலாம்.  இந்த சிவப்பு அரிசியில் நார்ச்சத்து மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது.  சிவப்பு அரிசியுடன் சில ரெசிபிகள் சேர்த்து சாப்பிடலாம்.  அந்த நான்கு ரெசிபிகள் என்னவென்று பார்ப்போம்.  

அவியல்: 
முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய், மாங்காய், கேரட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அவியல் செய்து சாப்பிடலாம்.  கேரளாவில் பிரபலமான ரெசிபிகளுள் இதுவும் ஒன்று.  இதனை வீட்டிலேயே செய்து சாப்பிட அருமையாக இருக்கும். 

 Comments

avial
 

சிவப்பு அரிசி சேமியா கீர்: 
சிவப்பு அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் சேமியாவுடன் குங்குமப்பூ, பாதாம், ஏலக்காய் மற்றும் பால் சேர்த்து முப்பதே நிமிடங்களில் செய்யப்படும் இந்த கீர் சுவையானதாக இருக்கும்.  

1f58lvp8
 

போஹா: 
மஷ்ரூம், ஒயிட் ஒயின், தக்காளி, சிவப்பு அரிசி சேர்த்து போஹா ரெசிபி செய்து சாப்பிட்டால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.  இதனை காலை உணவாக செய்து சாப்பிடலாம்.  

red poha grammarsofcooking
 

சாலட்: 
பசியை போக்கி உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதில் சாலட்டிற்கு நிகர் சாலட் தான்.  பார்லி, காராமணி, கார்ன், மாதுளை, ஆப்ரிகாட், சிவப்பு அரிசி ஆகியவற்றுடன் ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு, தைம் மற்றும் துளசி சேர்த்து சாலட் தயாரித்து சாப்பிடலாம்.  இது உங்களுக்கு ஆற்றலை கொடுத்து புத்துணர்ச்சியோடு இருக்க செய்யும். 

barley salad
 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement