அடிக்கடி சோயா உணவுகளை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா??

100 கிராம் சோயா நகெட்டில் 52.4 கிராம் புரதம் இருக்கிறது.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 16, 2019 11:44 IST

Reddit
High-Protein Vegetarian Diet: 4 Interesting Ways Of Cooking With Soya Chunks
Highlights
  • சோயா உணவுகளில் புரதம் நிறைந்துள்ளது.
  • சோயாவை கொண்டு ருசியான உணவுகளை தயாரித்திட முடியும்.
  • சைனீஷ் ரெசிபி ஸ்டைலில் சோயா மஞ்சூரியன் செய்து சாப்பிடலாம்.

தசைகளின் வளர்ச்சிக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் புரதம் மிகவும் அவசியமான உணவு.  ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியது புரதம்.  ஒவ்வொருவருக்கும் புரத தேவையின் அளவு மாறுபடும்.  அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புரதம் மிக எளிதில் கிடைத்துவிடும்.  ஆனால் சைவ உணவுகள் எல்லாவற்றிலும் புரதம் கிடைத்துவிடுமா என்றால் நிச்சயம் இல்லை.  புரதம் நிறைந்த சைவ உணவுகளை நாம் தேடி உண்ண வேண்டும்.  உடலுக்கு தேவையான புரதம் நிறைந்த உணவுகளில் சோயாவும் ஒன்று.  சோயாவில் புரதம் நிறைந்திருக்கிறது.  கொழுப்பு சத்து அளவில் மிக குறைவாக இருக்கிறது.  சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு, சோயா பால், சோயா நகெட் போன்றவற்றை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.  100 கிராம் சோயா நகெட்டில் 52.4 கிராம் புரதம் இருக்கிறது.  சோயாவை எப்படி உணவில் சேர்த்து கொள்வதென்று பார்ப்போம். 

 

m0lkhb 

  

சோயா ரைஸ்:

பிரியாணி, புலாவ், ஃப்ரைடு ரைஸ் ஆகியவற்றுடன் சோயா சங்க்ஸ் சேர்க்கலாம்.  இந்த ரெசிபிகளுடன் சேர்த்து சமைக்கும்போது அதன் ருசி அருமையாக இருப்பதோடு அரோக்கியமும் கிடைக்கும். சோயா மஞ்சூரியன்:

மஷ்ரூம், காலிஃப்ளவர் போன்றவற்றை கொண்டு மஞ்சூரியன் தயாரிப்பது வழக்கம்.  மாறாக சோயா கொண்டு மஞ்சூரியன் தயாரித்து பாருங்கள்.  அதன் ருசி தனித்துவமாக இருக்கும்.ஸ்டிர்-ஃப்ரைடு சோயா நகெட்ஸ்:

சோயா நகெட்டை ஃப்ரை செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.  தயாரிப்பது மிகவும் எளிமையானது.  குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். 8e8uukgg 

சோயா ஸ்டஃப்டு சாண்ட்விச்:

சாண்ட்விச் தயாரிக்கும்போது உங்களுக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்.  அதேபோல சோயாவை வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, சாண்ட்விச் ஸ்ப்ரெட், குடைமிளகாய், கேரட், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. 

Listen to the latest songs, only on JioSaavn.com

                       Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement