ஸ்லிம் ஆகணுமா? பீட்ரூட் ஜூஸ் குடிங்க!

பீட்ரூட்டில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவை இருப்பதனால் பல நோய்கள் நம்மை நெருங்க விடாமல் பாதுகாக்கிறது. அதனால் தான் இந்த பீட்ரூட்டை “சூப்பர் ஃபுட்” என்று அழைக்கப்படுகிறது.

Shubham Bhatnagar  |  Updated: October 03, 2018 18:38 IST

Reddit
Beetroot Juice For Weight Loss: 4 Interesting Ways Of Making Beetroot Juice At Home

உடல் எடை குறைய வேண்டும்.  அதே சமயத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைத்து விட வேண்டும் என்பது தான் நம்மில் பலரும் எதிர்பார்க்கும் விஷயம்.  வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதனால் உடல் எடையை குறைக்க முடியும்.  கொழுப்பை முற்றிலுமாக தவிர்க்காமல் கொழுப்பு குறைவான உணவுகளை சாப்பிடலாம்.  அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியது பீட்ரூட்.  பீட்ரூட் மூலம் எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை பார்ப்போம். 

உடல் எடை குறைய வேண்டும்.  அதே சமயத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைத்து விட வேண்டும் என்பது தான் நம்மில் பலரும் எதிர்பார்க்கும் விஷயம்.  வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதனால் உடல் எடையை குறைக்க முடியும்.  கொழுப்பை முற்றிலுமாக தவிர்க்காமல் கொழுப்பு குறைவான உணவுகளை சாப்பிடலாம்.  அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியது பீட்ரூட்.  பீட்ரூட் மூலம் எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை பார்ப்போம். 

 பீட்ரூட் ஜூஸ்

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தான வைட்டமின் மற்றும் தாதுக்கள் பீட்ரூட்டில் அதிகமாக உள்ளது.  இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், உங்களை நாள் முழுவதும் நிறைவாக வைத்திருக்க உதவும்.  மேலும் தங்கள் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம்.  பீட்ரூட்டில் மிக குறைவான கலோரிகளே உள்ளன.  உதாரணமாக, 100 மிலி பீட்ரூட் சாற்றில் 35 கலோரிகளே உள்ளன.  வீட்டிலேயே பீட்ரூட் ஜூஸ் எப்படி தயார் செய்வதென்பதை பார்ப்போம். 

கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ்

நறுக்கிய கேரட் 2 கப், நறுக்கிய பீட்ரூட் 2 கப், அரை கப் தண்ணீர், எலுமிச்சை சாறு 5 மேஜைக்கரண்டி, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சிறிதளவு புதினா இலைகள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிக்கட்டாமல் அப்படியே பருகலாம்.  கேரட்டில் நார்சத்து மிகுதியாக உள்ளது.  கேரட் உடன் பீட்ரூட் சேர்த்து அரைத்து இதன் சாற்றை அருந்தி வரலாம்.  இதனால் உங்களுக்கு பசியுணர்வு இல்லாமல் இருக்கும்.  உடல் எடையும் குறையும். 

0fv2nc9

பீட்ரூட்டுடன் கேரட் சேர்த்து குடிக்கும்போது எடை குறையும்.
 

ஆப்பிள் மற்றும் பீட்ரூட் ஜூஸ்

நறுக்கிய பீட்ரூட் 2 கப், நறுக்கிய ஆப்பிள் 1 கப் இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்து அதில் சிறிதளவு பட்டைத்தூள், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து குடிக்கலாம்.  ஆப்பிளில் கலோரிகள் மிகவும் குறைவு.  அதாவது 100 கிராம் ஆப்பிளில் 50 கலோரிகளே இருக்கின்றன என்பதனால் இவை இரண்டையும் சேர்த்து குடிக்கலாம். 

apple benefits

 

 மாதுளை மற்றும் பீட்ரூட் ஜூஸ்

பழங்களில் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்தது மாதுளை.  மாதுளையில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது.  இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், செரிமானத்திற்கு மிகவும் நல்லது.  உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்கக்கூடிய பாலிபினால் மற்றும் லினொலெனிக் அமிலம் மாதுளையில் இருப்பதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.  இதனால் உடல் எடை குறையும்.  வெட்டி வைத்த பீட்ரூட் 2 கப், மாதுளை 1 கப், எலுமிச்சை சாறு 3 மேஜைக்கரண்டி மற்றும் ப்ளாக் சால்ட் சேர்த்து அரைத்து குடிக்கலாம். 

deseeding pomegranate

 

தக்காளி மற்றும் பீட்ரூட் ஜுஸ்

ஆப்பிளை போலவே தக்காளியிலும் கலோரிகள் மிகவும் குறைவு.  வெட்டி வைத்த பீட்ரூட் 2 கப், நறுக்கி வைத்த தக்காள் 11/2 கப், எலுமிச்சை சாறு 3 மேஜைக்கரண்டி, சிறிதளவு புதினா இலைகள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து பருகலாம்.  

side effects of tomatoes

  இதுபோல பீட்ரூட் சாற்றை குடிப்பதால், உங்கள் சிறுநீர் மற்றும் மலம் சிவப்பு நிறத்தில் வரக்கூடும்.  ஆனால் இதற்காக பயப்பட தேவையில்லை. 

CommentsAbout Shubham BhatnagarYou can often find Shubham at a small authentic Chinese or Italian restaurant sampling exotic foods and sipping a glass of wine, but he will wolf down a plate of piping hot samosas with equal gusto. However, his love for homemade food trumps all.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement