இரத்த சர்க்கரையை சீராக்கும் சிறுதானியங்கள்!!

இந்த கலோரி குறைந்த உணவை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வரலாம்.  

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 22, 2019 10:57 IST

Reddit
Diabetes Diet: 4 Millet Recipes For A Diabetic-Friendly Filling Breakfast
Highlights
  • இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்க காலை உணவு அவசியம்.
  • சிறுதானியங்களில் புரதம், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உள்ளது.
  • சோளம், கம்பு, ராகி ஆகியவற்றை காலை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

காலை உணவின் தரத்தை பொருத்துதான் உடலில் இரத்த சர்க்கரை அளவு மாறுபடும்.  இரத்த சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் காலையில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  அதேபோல இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களும் தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடலாம்.  கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின், புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கும் உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டால் உடல் இயக்கம் மற்றும் ஆரோக்கியம் சீராக இருக்கும். 

கம்பு ரொட்டி: 
பாரம்பரிய இந்திய தானியங்களில் கம்பும் ஒன்று.  கம்பு, முழு கோதுமை, வெந்தயக்கீரை, தயிர் மற்றும் பனீர் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடலாம்.  இதில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.  இரத்த சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த ரொட்டியை காலை உணவாக சாப்பிட்டு வரலாம். 

தினைமாவு கூல்: 
நீரிழிவு நோயாளிகள் தினைமாவில் கூல் செய்து காலை உணவாக சாப்பிடலாம்.  இந்த கூலில் சர்க்கரை சேர்க்காமல் வாழைப்பழம் மற்றும் அத்திப்பழம் சேர்த்து குடிக்கலாம்.  இதில் தாமரை விதைகள், முந்திரி, அமராந்த் விதைகளை சேர்த்து குடித்தால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

ராகி தோசை: 
அரிசி மாவு, கோதுமை மற்றும் ராகி மாவு சேர்த்து செய்யப்படும் தோசையில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்திருக்கிறது.  ஆனால் இந்த தோசையில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கிறது.  இதனை சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிடலாம்.  

m0vdulk8

 

Comments

சோளம்: 
சோளம், சூக்கினி, குடைமிளகாய், பேபி கார்ன், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை ரைஸ் ப்ரான் எண்ணெயில் வேக வைத்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  இந்த கலோரி குறைந்த உணவை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வரலாம்.  (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement