ஹெல்தியான லஞ்சுக்கு 4 ஈஸி ரெசிப்பிகள்!

வீட்டில் சமைத்த உணவே என்றும் சிறந்தது. அதில் இருக்கும் அனைத்து விதமான பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்த்து. உங்களுக்காக சில எளிய உணவு ரெசிப்பிகள் இங்கே.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: March 26, 2019 18:45 IST

Reddit
4 Quick And Healthy Make-Ahead Lunch Recipes
Highlights
  • ஆரோக்கியமாக வாழ உணவு பழக்கவழக்கங்கள் சீராக இருக்க வேண்டும்.
  • மதிய உணவு ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது.
  • நன்கு சமைத்த உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.

பல வீடுகளில் காலை எழுந்தவுடன் மிகப்பெரிய தலைவலியாக இருப்பது இன்னைக்கு என்ன சமைப்பது என்ற கேள்வி? மதிய உணவு டேஸ்டாகவும் இருக்க வேண்டும் அதேசமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். நம்மில் பலர் லன்ச் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுகிறோம் அல்லது ஆன்லைலின் ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். இது ஆரோக்கியமானதுதானா? எல்லாவற்றையும்விட மதிய உணவு நமக்கு மிக அத்தியாவசியமான ஒன்று. அதுதான் நமக்குத் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துகளையும் சக்தியையும் தருகிறது.  அதற்கு நாம் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை சாப்பிடுவதின் மூலமே அதற்கான தீர்வை அடைய முடியும்.  வீட்டில் சமைத்த உணவே என்றும் சிறந்தது. அதில் இருக்கும் அனைத்து விதமான பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்த்து. உங்களுக்காக சில எளிய உணவு ரெசிப்பிகள் இங்கே.1. மெடிட்ரேனியன் வாட்டர்மெலன் சாலட் (Mediterranean Watermelon Salad)

இதில் ஒரு கப் உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சி மற்றும் எனர்ஜியுடன் வைத்திருக்க உதவும்.

தேவையானவை -

2 கப் தர்புசணி துண்டுகள்

2 பச்சை/சிகப்பு/மஞ்சள் கேப்ஸிகம்

1 கப் வெங்காயம்

1 கப் வெள்ளரி துண்டுகள்

1 கப் தக்காளி

2 டேபிள் டீஸ்பூன் மாதுளை ஜூஸ்

1 டேபிள் டீஸ்பூன் மஸ்டர்ட் சாஸ்

1 டேபிள் டீஸ்பூன் ஆலிவ் ஆயில்

சீரகப் பொடி சிறிதளவு

ஆரிகானோ பொடி சிறிதளவு

8-10 ஆலிவ்ஸ்

1 கப் பார்ஸ்லி நறுக்கியது

2 லெட்யூஸ் இலைகள்

ஃப்ளாக்ஸ் சீட் மற்றும் உப்பு, மிளகு சுவைக்கேற்றவாறுசெய்முறை: 

1. மஸ்டட்ர் சாஸ், சீரகப்பொடி, ஆரிகானோ, உப்பு மற்றும் மிளகுப் பொடியுடன் மாதுளை ஜூஸை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

2. இன்னொரு பாத்திரத்தில், மற்றப் பொருட்களை ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும். 

3. காட்டேஜ் சீஸுடன் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

சுவையான ஆரோக்கியமான உணவு தயார். உங்களுக்கக ஒரு ஈஸி டிப்ஸ் இரவே வெங்காயம், தக்காளி மற்றும் பார்ஸ்லியை வெட்டி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் வைத்துக் கொண்டால் காலையில் செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

watermelon salad

 

2. கேல் அண்ட் குய்னோவா பவுல் (Kale And Quinoa Bowl -)

கேல் மற்றும் குய்னோவாவில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்தும் புரதமும் நிறைந்துள்ளது. இது எனர்ஜி தரும் ஃபுட்.

தேவையானவை:

1 கட்டு கேல் லீவ்ஸ் நறுக்கியது

1 கப் குய்னோ

2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்

அரை கப் மாதுளை விதை

அரை கப் செர்ரி சைஸ் தக்காளி வெட்டியது

1 லெமன்

 ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுப்பொடிசெய்முறை: 

1. குய்னாவை அந்த பேக்கேஜில் குறிப்பிட்டவாறு வேகவைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் ஆலிவ் ஆய்லை சூடாக்கி அதில் கேல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் வரை வைக்கவும்.

2. குய்னா, தக்காளி மற்றும் மற்ற ஸ்பைஸஸ்களைச் சேர்த்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

3. அடுப்பில் இருந்து இறக்கி, மற்ற ஆலிவ் ஆயில், மாதுளை விதை மற்றும் லெமன் ஜூஸ் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தால் ரெசிப்பி தயார்.

டிப்ஸ்: கேல் லீவ்ஸ் மற்றும் செர்ரி தக்காளியை தேவையானபோது மட்டும் வெட்டிக் கொள்ளவும். omf44ekg

 

3. வீட் பாஸ்தா வித் ப்ரோக்கோலி (Whole-Wheat Pasta With Broccoli)

ப்ரோகோலியில் வைட்டமின் சி, ஆண்டிஆக்சிடண்ட் மற்றும் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும் சக்தி உள்ளது.

தேவையானவை:

2 கப் பாஸ் - fussily/penne/fettuccini

2 கட்டு ப்ரோகோலி, சிறியதாக வெட்டிக் கொள்ளவும்

1 டேபிள் ஸ்பூன் ஆயில் (உங்கள் சாய்ஸ்)

2 டேபிள் ஸ்பூன் பீனட் பட்டர்

2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்

1 டேபிள் ஸ்பூன் ரெட் பெப்பர் ஃப்ளேக்ஸ்

அடை டேபிள் ஸ்பூன் ரைஸ் வினிகர்

தேவையான அளவு உப்புசெய்முறை:

1) பேக்கேஜில் குறிப்பிட்டுள்ளபடி பாஸ்தாவை வேகவைத்துக் கொள்ளுங்கள். 

2) ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் ப்ரோகோலி, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி தண்ணீர் வற்றும் வரை 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.

3) பவுலில் வேகவைத்த ப்ரோகோலி, பாஸ்தாவுடன் மற்ற பொருட்களையும் சேர்த்துக் கிளறவும்.

டிப்ஸ்: பாஸ்தாவை ஒருநாள் முன்பே வேகவைத்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் காலை செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

a2uu18so

 

4. ப்ரவுன் ரைஸ் வித் கார்ன்ஸ்

சோளம் மற்றும் தேங்காயின் முழு நற்குணங்கள் இருப்பதால் இயற்கையான எனர்ஜி பூஸ்டர்ஸ் இந்த ரெசிப்பி

தேவையானவை:

250 கிராம் ப்ரவுன் ரைஸ்

100 கிராம் சோளம்

1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்

1 வெங்காயம்

1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

தேவையான அளவு உப்பு

2 பச்சை மிளகாய் நறுக்கியது

அரை டேபிள் ஸ்பூன் சீரகம்

1 பே லீஃப்

6 கிராம்பு

2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி நறுக்கியது

2 லெமன் - ஜூஸ்

அரை கப் க்ரீன் அல்லது ரெட் கேப்ஸிகம்

1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்செய்முறை:

1. அரிசியை கழுவி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

2. துருவிய தேங்காய், கொத்தமல்லு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

3. ஒரு பேனில் ஆயிலை ஊற்ற் பே லீஃப், வெங்காயம், சீரகம், கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்து வைத்த தேங்காய் பேஸ்டையும் சேர்த்துக் கிளறவும்

4. 2-3 நிமிடம் அடுப்பில் வைத்து அதில் சோளம் மற்றும் கேப்ஸிகம் சேர்க்கவும்

5. கழுவிய அரிசியை தண்ணிரின்றி வடித்து பேனில் போடவும்.

6. 2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு, சிகப்பு மிளகய்தூள் சுவைக்கேற்றவாறு போடவும்.

7. அரிசி நன்றாக வெந்ததும், லெமன் ஜூஸ் கொத்தமல்லி தூவி இறக்கி வைக்கவும்.

galqim9o

 

டிப்ஸ்: தேங்காய் அரைத்த கலவையை முன்னாடியே அரைத்து வைத்துக் கொண்டால் நேரம் மிச்சமாகும்.இந்த உணவுகள் ஹெல்தி மட்டும் இல்லை நல்ல சுவையாகவும் இருக்கக்கூடியது. 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement