முட்டையில் எண்ணெய் சேர்க்காமல் சமைக்க வேண்டுமா?

முட்டையுடன் கீரைகள், நட்ஸ், விதைகள் ஆகியவை சேர்த்து சுவையான ரெசிபியை தயாரிக்கலாம்.  

  |  Updated: September 14, 2019 12:54 IST

Reddit
Weight Loss Tips: 4 Smart Ways Of Consuming Eggs That Will Boost Your Diet
Highlights
  • முட்டையில் ஒமேகா -3 ஃபேட்டி அமிலம் நிறைந்திருக்கிறது.
  • முட்டையை முறையாக சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
  • முட்டையில் வெண்ணெய் சேர்த்து சமைக்க கூடாது.

உடலுக்கு புரதச்சத்து மிகவும் அத்தியாவசியமானது.  முட்டையின் வெள்ளை பகுதியில் 90 சதவிகிதம் நீர் மற்றும் 10 சதவிகிதம் ஆல்புமின், க்ளோபுலின் மற்றும் ம்யூக்கோபுரோட்டீன் போன்ற புரத சத்துக்கள் இருக்கிறது.  உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதற்காகவும், உடல் எடையை குறைப்பதற்காகவும் முட்டை சாப்பிடலாம்.  இதில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகளும் இருக்கிறது.  குறிப்பாக ஒமேகா - 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  முட்டையை முறையாக சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதுடன், உடல் எடையும் குறையும்.  

1. காலை உணவு: 
முட்டையில் புரதம் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.  காலை உணவாக முட்டையை சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படாது.  இது உடலுக்கு நாள் ஒன்றிற்கு தேவையான ஆற்றலை கொடுத்து நிறைவாக வைத்திருக்கிறது.  

06gae6ro

 

2. சாண்ட்விச்: 
முட்டையை தனியாக சாப்பிடாமல் மற்ற ரெசிபிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.  சாண்ட்விச் உடன் முட்டையை ஸ்டஃப் செய்து சாப்பிடலாம்.  மல்டிக்ரைன் அல்லது முழுகோதுமை பிரட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.  ஓட்மீல் மற்றும் போஹாவுடனும் முட்டையை சேர்த்து சாப்பிடலாம்.  

3. எண்ணெய்: 
முட்டையை வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து சமைப்பதை தவிர்க்க வேண்டும்.  முட்டையில் ஏற்கனவே நிறைய கொழுப்பு சத்து இருப்பதால் அதனை பேக் செய்து சாப்பிடலாம்.  
 

Listen to the latest songs, only on JioSaavn.com

sl2k71m8

 

4.  சாலட்: 
முட்டையுடன் கீரைகள், நட்ஸ், விதைகள் ஆகியவை சேர்த்து சுவையான ரெசிபியை தயாரிக்கலாம்.  ஆம்லெட், சாலட் போன்றவை செய்து சாப்பிடலாம்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement