இந்த டெசர்ட் ரெசிபி உங்கள் உடல் எடை குறைக்கும்!!

உடல் எடை குறைக்கும் ரெசிபிகளை வீட்டிலேயே செய்து பாருங்கள்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 01, 2019 12:07 IST

Reddit
Weight Loss: 4 Summer Dessert Recipes That Won’t Kill Your Diet
Highlights
  • ராகியில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
  • மாம்பழத்திலும் நார்ச்சத்து இருக்கிறது.
  • ஓட்ஸ் மற்றும் யோகர்ட் சாப்பிடுவதால் உடலுக்கு புரதம் கிடைக்கிறது.

உடல் எடை குறைக்க எத்தனையோ உணவுகள் இருந்தும், ருசியான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு வகைகளை கொண்டும் உடல் எடை குறைக்கலாம்.  கலோரிகள் குறைவான உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், உடல் எடை தானாகவே குறையும்.  கொழுப்பு மற்றும் இனிப்பு சத்து குறைந்த டெசர்ட் ரெசிபிகளை எப்படி செய்வதென்று பார்ப்போம். வீகன் மேங்கோ மட்சா புட்டிங்:

கோடை காலம் என்றாலே மாம்பழம் தான் நினைவிற்கு வரும்.  உடல் எடை குறைக்க மாம்பழத்தை சாப்பிடலாம். மாம்பழத்தில் கொழுப்பு சத்து மற்றும் உப்பு சத்து துளியும் இல்லை.  இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.  மாம்பழம், ஆளிவிதை, தேங்காய் பால், சியா விதை ஆகியவை சேர்த்து இனிப்பாக புட்டிங் ரெசிபியை தயாரித்து சாப்பிடலாம்.22t6909

 

ஓட்ஸ் யோகர்ட் போரிட்ஜ் பர்ஃபைட்:

ஓட்ஸ் மற்றும் யோகர்ட்டில் புரதம் நிறைந்துள்ளது.  இதில் கலோரிகளும் மிகக்குறைவு.  காலை உணவாக, இந்த ஹெல்தி ரெசிபியை சாப்பிடலாம்.  இது உங்களை நாள் முழுக்க ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும். 

frk6s6r8

 

டூ இன் ஒன் ஃபிர்னி:

அரிசி சாதம் மற்றும் பால் சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி சுவையிலும், மணத்திலும் அருமையாக இருக்கும்.  இதில் ரோஸ் எசன்ஸ், பிஸ்தா, பாதாம், ஆகியவை சேர்க்கப்படுவதால், ருசியில் அலாதியாக இருக்கும். 

mqu12rko

 

ராகி டார்க் சாக்லேட் கேக்:

ராகி மற்றும் டார்க் சாக்லேட்டில் நார்ச்சத்து உள்ளது.  டார்க் சால்கேட்டில் கோகோ அதிகமாக உள்ளதால் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.  உடல் எடை குறைக்க ராகி சரியான உணவு. 

Listen to the latest songs, only on JioSaavn.com

2998dosஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement