Onam 2019: ஓணம் திருவிழாவிற்கு ஏற்ற கேரள ரெசிபிகள்!!

ஓணம் பண்டிகையின் போது வெல்லம், தேங்காய், ட்ரை ஃப்ரூட்ஸ், நெய் ஆகியவை சேர்த்து ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

  |  Updated: September 10, 2019 18:25 IST

Reddit
Onam 2019: 4 Traditional Desserts From Kerala You Can Prepare At Home This Onam

கேரளத்தின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று ஓணம்.  கேரளத்தில் தொடர்ச்சியாக பத்து நாட்கள் கொண்டாடக்கூடிய இந்த ஓணம் திருவிழா நாளை முடிவடைய இருக்கிறது.  ஓணம் பண்டிகையின்போது பல வண்ண மலர்களால் கோலமிட்டு, விளையாட்டுகள் விளையாடுவதை கேரள மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.  மேலும் இந்நாளின் கொண்டாட்டமாக மிகப்பெரிய வாழையிலையில் ஐந்து வகையான காய்கறிகள் கொண்டு ஒன்பது வகையான ரெசிபிகள் செய்து அத்துடன் சாதம், ஊறுகாய், அப்பளம், இனிப்பு வகை மற்றும் பாயாசம் போன்றவற்றை பரிமாறப்படுகிறது.  ஓணம் பண்டிகையை வீட்டில் வெகு சிறப்பாக கொண்டாட சில ருசியான இனிப்பு வகைகளை பரிந்துரைக்கிறோம்.  

Newsbeep

1. அடை பிரதமன்: 
சாதம், வெல்லம், தேங்காய், முந்திரி மற்றும் திராட்சை ஆகியவற்றை தேங்காய் பால் சேர்த்து ருசியாக செய்யலாம்.  இந்த ரெசிபியை ஓணம் பண்டிகையின் போது செய்து சாப்பிடலாம்.  

 fe52klso

 


2. நெய் அப்பம்: 
அரிசி, வெல்லம், வாழைப்பழம், தேங்காய், ஏலக்காய் ஆகியவை சேர்த்து ருசியான அப்பம் தயாரிக்கலாம்.  அதனை நெய் சேர்த்து தயாரித்தால் இன்னும் ருசியாக இருக்கும்.  லேசான மொருமொருப்புடன் இருக்கக்கூடிய இந்த நெய் அப்பத்தை விரும்பி சாப்பிடாதவர்களே கிடையாது.  மிகவும் எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.   

cjlhock8
 

3. பால் பாயாசம்: 
சாதம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, பால் ஆகியவை சேர்த்து பால் பாயாசம் செய்யலாம்.  கெட்டியாகவும், க்ரீமியாகவும் இருக்கக் கூடிய இந்த பால் பாயாசம் ருசியானதாக இருக்கும்.  வழக்கம்போல செய்யாமல் தேங்காய், பாசிப்பருப்பு ஆகியவை சேர்த்து செய்து சாப்பிடலாம்.  

 

Listen to the latest songs, only on JioSaavn.com

payasam 

4. ரவா லட்டு: 
ரவையை வறுத்து அத்துடன் சர்க்கரை, ஏலக்காய், நெய், ட்ரை ஃப்ரூட்ஸ் ஆகியவை சேர்த்து லட்டு தயாரிக்கலாம்.  இதனை இன்னும் ருசியானதாக்க நட்ஸ் சேர்க்கலாம்.  குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிடலாம்.   

goond ka ladoo 



Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement