மஞ்சளின் நற்குணங்கள் அறிவீர்களா?

மஞ்சளில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் உடலில் வலி, முதிர்ச்சி, சரும ஆரோக்கியம், இருதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 10, 2019 13:14 IST

Reddit
Benefits Of Turmeric: 4 Ways To Include Turmeric Or Haldi In Your Summer Recipes
Highlights
  • சுத்தமான மஞ்சளில் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகம் உள்ளது.
  • உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் தன்மை மஞ்சளுக்கு உண்டு.
  • உணவில் மஞ்சள் சேர்த்து கொண்டால் வயது முதிர்ச்சி தாமதமாகும்.

கோடையில் அடிக்கடி நீராகாரங்கள் ஏதேனும் குடித்து கொண்டே இருக்க தோன்றும்.  சர்பத், லஸ்ஸி, ரெய்தா மற்றும் சாலட் போன்றவற்றைதான் நாம் கோடையில் அடிக்கடி குடிப்போம்.  அப்படியானவற்றில் சில ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய பொருட்களை சேர்த்து தயார் செய்து குடிப்பது நல்லது.  நம் எல்லோருடைய சமையலறையிலும் எப்போதும் இருக்கக்கூடிய பொருள் மஞ்சள்.  மஞ்சள் கிருமி நாசினி என்பதால் எல்லா உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது.  மஞ்சளில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் உடலில் வலி, முதிர்ச்சி, சரும ஆரோக்கியம், இருதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  மூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும்.  உடலில் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தி உடல் எடை குறைக்க செய்கிறது.  கோடை காலத்திற்கு ஏற்ற சில ரெசிபிகளை மஞ்சள் சேர்த்து எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.  வாழைப்பழம் மற்றும் அன்னாசி ஸ்மூத்தி: 

வாழைப்பழம், அன்னாசி, கேரட், ஒரு சிட்டிகை எலுமிச்சை, சிறிதளவு மஞ்சள் தூள் போன்றவறை சேர்த்து ஸ்மூத்தி தயார் செய்யலாம்.  உடலுக்கு நீர்ச்சத்து கொடுத்து, ஊட்டச்சத்துடனும் நிறைவாகவும் வைத்திருக்கும்.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகமாக இருக்கும்.  a4gl7ndo
 

ஐஸ் பாப்ஸ்: 

ஐஸ் பாப்ஸ் தயாரிப்பதற்கு மிகவும் எளிமையானது.  குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த ஐஸ் பாப்ஸிகில்ஸ்  தேங்காய் பால், தேன், மஞ்சள், பட்டை மற்றும் வென்னிலா சேர்த்து தயாரிக்கலாம்.  popsicle

லெமனேட்: 

அரைத்த மஞ்சள், ஒரு தேக்கரண்டி இஞ்சி, தேன் ஆகியவற்றை குளிர்ந்த லெமனேட்டுடன் சேர்க்கலாம்.  இது கோடைக்காலத்திற்கு ஏற்றது. m660ugcoபுதினா மஞ்சள் சட்னி: 

வழக்கமாக புதினா சட்னியுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து செய்யும்போது அதன் ருசி அருமையாக இருக்கும்.  இதனை ரொட்டி, பராத்தா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.  இது உங்களை ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் வைத்திருக்கும்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

46g61ii8

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement