பப்பாளி விதையின் 5 நன்மைகள்!!!

மாதவிடாய் காலத்தில் பப்பாளி விதையை சாப்பிடுவதால் வயிறு மற்றும் இடுப்பில் ஏற்படும் தசை வலி  குணமாகும்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 07, 2019 11:50 IST

Reddit
5 Surprising Benefits Of Eating Papaya Seeds
Highlights
  • பப்பாளி விதைகளை அளவாக சாப்பிடுவது நல்லது.
  • பப்பாளி விதையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு.
  • பப்பாளி விதைகளை அரைத்து பொடியாக பயன்படுத்தலாம்.

பப்பாளியின் அழகு மறும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் அறிவோம்.  கோடைக்காலம் தான் பப்பாளிக்கு ஏற்ற காலம்.  பப்பாளியில் வைட்டமின் ஏ, பீட்டா கெரட்டின் உள்ளதால் சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்கிறது.  கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது.  அதேபோல பப்பாளி விதையும் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுகிறதென்றால் நம்ப முடிகிறதா?  ஆம்.  பொதுவாக நாம் பழங்களில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு தான் சாப்பிடுவோம்.  எல்லா விதைகளுமே விஷத்தன்மை மிகுந்ததல்ல.  பழங்களின் விதைகள் கசப்பு சுவை மிகுந்ததாக இருக்கும்.  மேலும் விதைகள் வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கும்.  சில ஊட்டச்சத்து நிபுணர்கள் பப்பாளி விதையுடன் சாப்பிடுவதே சிறந்தது என கூறுகின்றனர்.  பப்பாளி விதையை சாப்பிடுவதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.  நோய் தொற்று:

பப்பாளி விதையில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஃப்ளேவனாய்டு மற்றும் பாலிஃபினால் இருப்பதால், இருமல், சளி மற்றும் நாட்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.  j7urh1m8

 

உடல் எடை: 

பப்பாளி விதைகளில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான சக்தியை அதிகரிக்க செய்கிறது.  மேலும் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கிறது.  நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் சீராக இருப்பதோடு இருதய ஆரோக்கியமும் சீராக இருக்கும்.  குடல் ஆரோக்கியம்:

பப்பாளி விதையில் ப்ரோடியோலைடிக் என்சைம் இருப்பதால் குடலில் உள்ள பாக்டீரியா மற்றும் பாராஸைட்களை அழித்து வயிறு மற்றும் குடல் பகுதிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  மாதவிடாய் வலி: 

மாதவிடாய் காலத்தில் பப்பாளி விதையை சாப்பிடுவதால் வயிறு மற்றும் இடுப்பில் ஏற்படும் தசை வலி  குணமாகும்.  கொலஸ்ட்ரால்: 

பப்பாளி விதையில் ஃபேட்டி ஆசிட் மற்றும் ஆலீக் அமிலம் போன்றவை இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இதனை சாப்பிடலாம்.  பப்பாளி விதையை எப்படி சாப்பிடுவது?

பப்பாளி விதையை அரைத்து, அந்த பொடியை ஸ்மூத்தீ, பழச்சாறு, டெசர்ட் மற்றும் டீ ஆகியவற்றில் சேர்த்து குடிக்கலாம்.  மேலும் அதில் தேன், வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.  

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement