முளைக்கட்டிய தானியங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்!!

காலை நேரத்தில் முளைக்கட்டிய பயறுகளை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதுடன் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.

  | Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 25, 2019 12:13 IST

Reddit
5 Benefits Of Eating Sprouts And Fun Ways To Include Them In Your Breakfast
Highlights
  • முளைக்கட்டிய பயறுகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
  • செரிமானம் மற்றும் இரத்த ஒட்டத்தை அதிகரிக்க இதனை சாப்பிடலாம்.
  • சாண்ட் விச், யோகர்டுடன் முளைக்கட்டிய பயறுகளை சேர்த்து சாப்பிடலாம்.

தற்போது எல்லோருமே ஆரோக்கியமான உணவுகளையும் வாழ்வியல் முறையையும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்.  அதற்காக ஆர்கானிக் உணவுகள், முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் பயிறுகள், பழச்சாறுகள், சாலட்கள் போன்றவற்றை தங்கள் உணவில் சேர்த்து கொள்ள துவங்கிவிட்டனர்.  குறிப்பாக காலை நேரத்தில் இதுபோன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடுகின்றன.  அத்துடன் காலை நேரத்தில் முளைக்கட்டிய பயிறுகளை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். செரிமானம்: 

முளைக்கட்டிய தானியங்கள் செரிமானத்திற்கு உகந்தது.  நார்ச்சத்து இதில் அதிகம் என்பதால் மலச்சிக்கலை போக்குகிறது.  மலம் கழிப்பதை சுலபமாக்குகிறது.  

Newsbeep
fsmi523g இரத்த ஓட்டம்: 

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடலாம்.  இதில் இரும்புச்சத்து, காப்பர் இருப்பதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும்.  மேலும் உறுப்புகளின் இயக்கத்தை சீராக வைக்கிறது.  இதன்மூலம் முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது.  உடல் எடை: 

முளைக்கட்டிய தானியங்களில் கலோரிகள் மிகவும் குறைவு.  நார்ச்சத்து அதிகம்.  இதனை சாப்பிடுவதால் நீங்கள் நீண்ட நேரம் பசியுணர்வு இல்லாமல் நிறைவாக இருக்க முடியும்.  பசியை தூண்டக்கூடிய க்ரெலின் என்னும் ஹார்மோன்கண் பார்வை: 

வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வையை அதிகரிக்கிறது.  முளைக்கட்டிய பயிறுகளில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  கொலஸ்ட்ரால்: 

முளைக்கட்டிய தானியங்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளதால் உடலில் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது.  முளைக்கட்டிய தானியங்களை தினசரி உணவில் எப்படி சேர்த்து கொள்ளலாம் என்பது குறித்து பார்ப்போம்.  ஆம்லெட்: 

தக்காளி, சீஸ், மிளகு, முட்டை மற்றும் முளைக்கட்டிய தானியங்கள் சேர்த்து ஆம்லெட் தயாரிக்கலாம்.  இதனை சாண்ட் விச்சுடன் சேர்த்து சாப்பிடலாம்.  தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.  முட்டை மற்றும் முளைக்கட்டிய பயறுகள் சேர்த்து செய்யப்படும் இந்த ஆம்லெட்டில் ஆரோக்கியம் நிறைந்துள்ளது.  

i7ns191c 

ஓட்ஸ்: 

தினமும் காலையில் ஒரு கப் ஓட்ஸுடன் பழங்கள் மற்றும் முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் பயறுகள் சேர்த்து சாப்பிடலாம்.  இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது.  மேலும் உங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்கும்.  

qmh61u44

சப்ஜி: 

பராத்தா மற்றும் சப்ஜியை காலை உணவாக சாப்பிட எல்லோரும் விரும்புவார்கள்.  அதில் நீங்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து செய்யலாம்.  

sprouts 

சாலட்: 

காலை நேரத்தில் சாலட் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது.  அத்துடன் கலோரிகளும் குறைவு என்பதால் உடல் எடை அதிகரிக்காது.  வழக்கமாக காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு சாலட் செய்து சாப்பிட்டுருப்பீர்கள்.  இம்முறை முளைக்கட்டிய பயறுகள் வைத்து சாலட் செய்து சாப்பிட்டு பாருங்கள்.  

0c2bg698 Listen to the latest songs, only on JioSaavn.com

யோகர்ட்:  

மோர், தயிர் அல்லது க்ரீக் யோகர்ட் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  அத்துடன் சில முளைக்கட்டிய பயறுகள், சாட் மசாலா, மிளகு போன்றவற்றை உங்கள் ருசிக்கேற்ப சேர்த்து குடிக்கலாம்.  

Comments

a9mlicao 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement