சளி தொல்லையை போக்க பட்டை பயன்படுத்தலாமா??

வெதுவெதுப்பான நீரில் பட்டையுடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவை குணமாகும். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 16, 2019 19:24 IST

Reddit
5 Best Cinnamon Recipes | Easy Cinnamon Recipes To Try At Home!

நறுமணம், ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ருசி ஆகிய மூன்றையும் தனக்குள் அடக்கியது பட்டை.  பண்டைக்காலம் முதலே பட்டை பயன்பாட்டில் உள்ளது.  இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது.  ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டிபையோடிக் தன்மை இருப்பதால் உடல் நலத்திற்கு நன்மை உண்டாக்கும்.  பட்டையின் மேலும் சில ஆரோக்கிய பலன்கள் பற்றி பார்ப்போம். சளி தொல்லை:

வெதுவெதுப்பான நீரில் பட்டையுடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவை குணமாகும்.  அல்லது பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பட்டை சேர்த்து கொதிக்க வைத்து அந்த ஆவியை முகர்ந்து வந்தாலும் சளி, இருமல் தொல்லை குணமாகும்.உடல் எடை:

உணவில் பட்டை சேர்த்து கொள்வதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை குறையும். 

நோய் எதிர்ப்பு சக்தி:

பட்டையில் பாலிஃபினால் மற்றும் ப்ரோஅந்தோசையனிடின் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  மேலும் இதில் ஆண்டிவைரல், ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிஃபங்கல் தன்மை இருக்கிறது.  முச்சுத்திணரல், இருதய நோய்கள் போன்றவை குணமாகும்.மாதவிடாய் வலி:

தினமும் காலையில் பட்டை சேர்க்கப்பட்ட தண்ணீரை குடித்து வந்தால் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.  தொடர்ச்சியாக உணவில் பட்டை எடுத்து கொண்ட பெண்களை காட்டிலும் பட்டை சேர்த்து கொள்ளாதவர்களுக்கு வலி அதிகமாக இருப்பதாக சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.  பட்டையை கொண்டு சில எளிமையான ரெசிபிகளை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம். 

cinnamon rolls 

 

ரோல்ஸ்:

மைதா, சர்க்கரை, வெண்ணெய், பால், பேக்கிங் பவுடர் மற்றும் பட்டை ஆகியவை கொண்டு மிக எளிமையான மற்றும் ருசியான ரோல்ஸ் தயாரிக்கலாம்.  மாலை நேரத்தில் டீ குடிக்கும்போது இதனை சேர்த்து சாப்பிடலாம். healthy muffins 625 

மஃபின்:

மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர், ஆரஞ்சு தோல், ஜாதிக்காய், ஆப்பிள், தயிர், முட்டை, பட்டை ஆகியவை சேர்த்து மஃபின் தயாரிக்கலாம்.  இதனை காலை உணவாக கூட சாப்பிடலாம்.

s82tt8hg 

 

காக்டெயில்:

விஸ்கி, அப்பிள் ஜூஸ் மற்றும் பட்டை சிரப் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த காக்டெயிலுடன் பட்டை குச்சிகள் வைத்து, ஐஸ் சேர்த்தும் பருகினால் அதன் ருசி அருமையாக இருக்கும். v3o66buc 

குக்கீஸ்:

பக்வீட், பிரட் மாவு, விப்டு கிரீம், சோடா, தேன், க்ளூக்கோஸ், சர்க்கரை, வெண்ணெய், பட்டை ஆகியவை கலந்து குக்கீஸ் செய்து சாப்பிடலாம்.  அதனை உங்களுக்கு பிடித்த வடிவங்களில் வெட்டி பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து சாப்பிடலாம். 

rvpemun8 

பேன்கேக்:

ஓட்ஸ், மோர், மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, பட்டை, உப்பு, தேன் அல்லது மேப்பிள் சிரப் ஆகியவை சேர்த்து பேன்கேக் தயாரித்து காலை உணவாக சாப்பிடலாம். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement